26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.200,00,00,00,000 கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து யுவராஜ் அளித்த பேட்டி: தமிழகத்தில் ஆற்று மணல் விநியோகம் இயங்கலை மூலம் நடந்து வருகிறது. இதனால் அரசுக்கு நேரடியாக வருவாய் கிடைக்கிறது. சவுடு மண், ஏரி மண், பட்டா மண், கருங்கல், களிமண், செம்மண் உள்ளிட்ட மணல்களை அரசின் அனுமதி பெற்று தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடித்து வருகின்றனர். அரசுக்கு ரூ.700 செலுத்திவிட்டு பொதுமக்களிடம் ஒரு லோடு ரூ.8 ஆயிரத்திற்கு விற்கின்றனர். இதை அரசே நேரடியாக இயங்கலை மூலம் விற்பனை செய்தால் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். ஆற்று மணல் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த அதே கும்பல் மேற்கண்ட கனிம வளங்கள் விநியோகத்தில் ஆக்கிரமிப்பு செய்து அதிக லாபம் பெற்று வருகின்றனர். எம்.சாண்ட் மணல் தரமற்ற முறையில் கடந்த 10 மாதங்களாக விநியோகிக்கப்படுகிறது. அரசு அறிவித்தும் இதுவரை 10 விழுக்காடு கல்லுடைப்பு இயந்திர உரிமையாளர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். தரமற்ற எம்.சாண்ட் மணல் விற்கப்படுவதால் அடுக்குமாடி கட்டிடங்களுக்கு கட்டுமான அனுமதியை அரசு உடனே நிறுத்த வேண்டும். அன்றாடம் ஓசூர் பகுதியில் இருந்து 4000 லாரி கருங்கல், ஜல்லி மற்றும் எம்.சாண்ட் மணல் நமக்கு நீர்தராத, கர்நாடகாவுக்கு கடத்தப்படுகிறது. இந்தக் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப் படுவதால் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஊழல் நடைபெறுகிறது. என்று அவர் தெரிவித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,813.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



