Show all

பெங்களூரு மாநகராட்சித் தலைவராக சம்பத்ராஜ் என்ற தமிழர் தேர்வு

பெங்களூரு பெருநகர மாநகராட்சி தலைவர் தேர்தல் இன்று (செப்டம்பர் 28) கவுன்சிலர் அரங்கத்தில் நடந்தது. தேர்தலில் ஓட்டுப்போட, 266 பேர் தகுதி பெற்றனர்.

சம்பத் ராஜ் போட்டியிட்டார். அவர் 139 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, இவர் பிஜே ஹல்லி வார்டு கவுன்சிலராக 2 முறை வெற்றி பெற்றவர். திருநெல்வேலியை சேர்ந்த சம்பத் ராஜ், பெங்களூருவின் 51வது மாநகராட்சித் தலைவராக பதவியேற்க உள்ளார்.

துணைத் தலைவராக மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் பத்மாவதி நரசிம்மமூர்த்தி தேர்வானார். இந்த தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி பாஜகவினர் முழக்கமிட்டு வெளிநடப்பு செய்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.