Show all

அந்த இடத்திற்கு வந்துள்ளது பெட்ரேல் டீசல் விலையேற்றம்! அன்றாடம் கொரோனா நிலவரம் வெளியிட வேண்டிருப்பது போல

17வது நாளாக இன்றும் விலை உயர்ந்தன பெட்ரோலும் டீசலும். பெட்ரோல் ரூ.83.04; டீசல் ரூ.76.77

09,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: பெட்ரோல் விலை கடந்த பதினேழு நாட்களில் மட்டும் 9.08 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதே போல டீசல் விலை இந்த பதினேழு நாட்களில் மட்டும் 12.5 விழுக்காடு அதிகரித்துள்ளது.

கொரோனா போல, பெட்ரோல் டீசல் விலையேற்றமும் மக்களைக் கடுமையாக பாதித்து வருகிறது.

சென்னையில் இன்று 17வது நாளாக பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து, பெட்ரோல் லிட்டருக்கு 83.04 ரூபாய், டீசல் லிட்டருக்கு 76.77 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் கடந்;த பதினேழு நாட்களானத் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.

தமிழ்நாட்டில் நேற்று, லிட்டர் பெட்ரோல் 82.87 ரூபாய்க்கும்; டீசல் 76.30 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று, லிட்டர் பெட்ரோல் 17 காசுகள் உயர்ந்து 83.04 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 47 காசுகள் அதிகரித்து 76.77 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வந்தது.

கடந்த 17 நாட்களில், சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 7.50 ரூபாய் மற்றும் டீசல் லிட்டருக்கு 8.55 ரூபாய் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கமும்- தங்கம் கூட பதினேழு நாட்களுக்கு முன்பு பத்து கிராம் ரூ47745க்கு விற்;ற நிலையில் இன்று ரூ49680க்கு விலையேறின நிலையில், இந்தப் பதினேழு நாட்களில் 4.05 விழுக்காடு விலையேற்றம் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.