Show all

உலக நலங்கு அமைப்பின் பாராட்டைப் பெற்றது! கொரோனா கட்டுப்பட்ட, உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதிகளில் ஒன்றான தாராவி

உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதிகளில் ஒன்றானதும், தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடியதும் ஆன பகுதி தாராவி ஆகும். இந்தத் தாராவியில் கொரோனா நுண்நச்சுப் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளை உலக நலங்கு நிறுவனம் பாராட்டியுள்ளது. 

26,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதிகளில் ஒன்றான தாராவியில் கொரோனா நுண்நச்சுப் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளை உலக நலங்கு நிறுவனம் பாராட்டியுள்ளது. 

இந்தியாவின் வணிகத் தலைநகரான மும்பையில் 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள தாராவி 6,50,000 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. சின்ன சந்துகள் திறந்தவெளி சாக்கடைகள் உள்ள தாராவியில் மக்கள் குடிசை மற்றும் பாழடைந்த கட்டிடங்களில் வாழ்கின்றனர். தாராவி தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய பகுதி ஆகும்.

மும்பையில் நாளது, 28,மாசி,தமிழ்த்தொடராண்டு-5121 அன்று (11.03.2020) இந்தியாவில் கொரோனா நுண்நச்சுத் தொற்று பதிவான மூன்று கிழமைகளுக்குப் பிறகு, தாராவியில் முதல் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

உலக நலங்கு நிறுவன தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், வெள்ளிக்கிழமை காணொளிக் காட்சி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, நுண்நச்சுப் பரவல் மிகவும் தீவிரமாக இருந்தாலும் கூட, அதை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதைக் காட்டுவதற்கு உலகெங்கிலும் இருந்து பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. அதற்கு, இத்தாலி, ஸ்பெயின், தென் கொரியா மற்றும் மும்பையில் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட தாராவியும் எடுத்துக்காட்டுகளாக உள்ளன என்று கெப்ரேயஸ் கூறினார்.

மேலும், கெப்ரேயஸ், “சமூக ஈடுபாடு மற்றும் நோய்வாய்ப்பட்ட அனைவரையும் பரிசோதித்தல், தொடர்பு தடமறிதல், தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சையளித்தல் ஆகியவற்றின் அடிப்படைகள் ஒரு பரவலான சங்கிலிகளை உடைத்து நுண்நச்சை ஒடுக்குவதற்கு முதன்மைத்துவமாகும்” என்று கூறினார்.

இந்தியாவில் இன்று 27,114 புதிய தொற்றுகள் பதிவாகி உள்ளதன் மூலம் கொரோனா தொற்று மொத்த எண்ணிக்கை 8.2 லட்சத்தை எட்டியுள்ளது. இதுவரை 22,123 பேர் உயிரிழந்தனர்.

உலக அளவில் கொரோனா தாக்கம் இன்னும் குறைந்தபாடு இல்லை. இந்தியா, அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் அதிகளவில் பரவி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் இன்னும் இறப்பு விகிதமும் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் இறப்பு விகிதம் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 
ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப்பகுதி என்று அழைக்கப்படும் தாராவியில் கொரோனா தொற்று பரவியபோது மும்பை மாநகராட்சி விழித்துக் கொண்டது. உடனடியாக செயலில் இறங்கியது. மருத்துவ முகாம்களை அமைத்தது. பரிசோதனையை துரிதப்படுத்தியது, நோயாளிகளை, முதியவர்களை தனிமைப்படுத்தியது. நோயாளிகளுக்கு உணவுகளை வழங்கி அவ்வப்போது பரிசோதனை மேற்கொண்டனர். நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 

தாராவியில் வசிக்கும் மக்களில் 80 விழுக்காட்டு பேர்கள் பொதுக் கழிப்பிடத்தைத்தான் பயன்படுத்துகின்றனர். 10க்கு 10 சதுர அடி இடத்தில் 8, முதல் 10 வரையிலான மக்கள் வசிக்கின்றனர். ஒரு சதுர கி. மீட்டரில் 2,27,136 மக்கள் வசிக்கின்றனர். இங்கு பரிசோதனையில் ஈடுபட்ட தனியார் மருத்துவர்களுக்கு பிபிஇ கிட், தெர்மல் ஸ்கேன்னர், ஆக்சிமீட்டர், முகமூடி, கையுறை ஆகியவற்றை மும்பை மாநகராட்சி வழங்கி இருந்தது. இந்தத் தாராவி பகுதியில் கொரோனா நோயாளிகள் முற்றாக குணமாகியுள்ளனர். புதிய பதிவு எதுவும் இல்லை என்று தெரியவருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.