Show all

அழகு உள்ளிட்ட நான்கு தொடர்கள் நிறுத்தம்! நடிக நடிகையர் நிறுவன- தொலைதூர ஒருங்கிணைப்பை தகர்க்கும் கொரோனாவால்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அழகு, கல்யாணப் பரிசு, தமிழ்ச்செல்வி, சாக்லேட் உள்ளிட்ட தொடர்கள் இனி கிடையாதாம்.

28,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அழகு, கல்யாணப் பரிசு, தமிழ்ச்செல்வி, சாக்லேட் உள்ளிட்ட தொடர்களை இனி ஒளிபரப்பப் போவதில்லை என தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பு, ஊரடங்கு கட்டுப்பாடு காரணம் பற்றி பல நடிகர்கள்- நடிகைகள் வருகை, சாத்தியம் இல்லாத நிலையில் தொடருக்கான படப்பிடிப்பை நடத்த இயலவில்லை. 

இந்நிலையில் சில தொடர்கள் தங்களது ஒளிபரப்பையே இரத்து செய்துள்ளன. அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ரேவதி, ஸ்ருதி உள்ளிட்டோர் நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த அழகு தொடர் நிறுத்தம் என சமூக வலைதளம் வழியே நடிகை ஸ்ருதி ராஜ் பகிர்ந்துள்ளார்.

தொடர்களில் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் மும்பை, கேரளா, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து வர வேண்டும். அவர்களின் வருகையில் சிக்கல் தொடர்கிறது.

அப்படியே வந்தாலும், அவர்களுக்கு கேரவன் பிரச்சினை, படப்பிடிப்பில் பாதுகாப்பு உள்ளிட்ட பாடுகளில் நிறையச் சிக்கல்கள் எழுந்தன. இந்தச் சூழலை தொடர்கள் தயாரிப்பு குழு எதிர்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அழகு, கல்யாணப் பரிசு, தமிழ்ச்செல்வி, சாக்லேட் ஆகிய 4 தொடர்களையும் ஒரே நிறுவனமே தயாரித்து வந்தது.

அந்தத் தொடர்களில் நடித்து வந்த பலர் படப்பிடிப்புக்கு வர இயலாத காரணத்தால் கதாபாத்திர மாற்றமும் செய்யப்பட்டது. அதுவும் சரிவரப் பொருந்தவில்லை. இதனால் தயாரிப்பு நிறுவனமும், தொலைக்காட்சியும் ஒருங்கிணைந்து தற்போது இந்தத் தொடர்களை நிறுத்துவது என முடிவெடுத்துள்ளனர்.

இதற்கு மாற்றாக இரு தரப்பும் இணைந்து வேறு புதிய தொடர்களைத் தொடங்கலாம் என்றும் கலந்துரையாடலில் இறங்கியுள்ளன. 

இந்த நிலையில் சன் தொலைக்காட்சியில் 5-க்கும் மேலான புதிய தொடர்கள் வாய்ப்பான வசதிகளோடு தொடங்க உள்ளன என்று கூறப்படுகிறது. 

உலகம் முழுவதும் ஆங்காங்கே எல்லாத் துறைகளிலும், உள்ளூர் பகுதிகளில், உள்மாவட்டப் பகுதிகளில், உள்நாட்டுப்பகுதிகளில் எளிதாகக் கிடைப்பவைகளைக் கொண்டு செயல்பாட்டை முன்னெடுக்க கொரோனா வலியுறுத்திகிறது. அதை நாம் வருங்காலங்களில் முன்னெடுக்கிற போது கொரோனா போன்ற தொற்றுப் பரவல்களை எளிதாக எதிர் கொள்ளலாம்.

ஒரு குடும்பத்திற்குள், வெளியில் இருந்து வருகிற எந்தச் சிக்கல்களையும் அந்தக் குடும்பம் எளிதாக கையாள குடும்ப அமைப்பு வலுப்படுத்தப் பட்டிருப்பது போல- 

வலுவான ஒருங்கிணைப்பை விரும்புகிற ஒவ்வொரு அமைப்பிலும் குடும்பம் போன்ற பிணைப்பு, உள்ளீடுகள் ஒவ்வொன்றின் மீதான தனிக்கவனம் சாத்தியமில்லையென்றால், கொரோனா தொற்றுக்கள் வருவது இயற்கை முன்னெடுக்கும் சீரமைப்பே.

தஞ்சை பெரிய கோயில் போல பைஞ்சுதையே இல்லாத வலுவான கட்டமைப்பை உருவாக்க முடியும். அதற்கு ஒவ்வொரு கல்லும் பார்த்துப் பார்த்து செதுக்கப் (தனிக்கவனம்) பட்டிருக்க வேண்டும். 

அல்லது சிறு சிறு மணல்துகள்களை ஒருங்கிணைத்து வலுவான கட்டமைப்பை உருவாக்க பைஞ்சுதை ஒவ்வொரு மணலையும் ஒருங்கிணைத்த கான்கீரிட் கட்டமைப்பாக உருவாக்கப்பட வேண்டும். என்பது நமக்கு தெரிந்திருக்கிறது. 

ஆனால் சமூக கட்டமைப்பிற்கு வெறுமனே ஆதிக்கமே போதும் என்று நினைத்தால், இயற்கை கொரோனா மூலம் நமக்கு சரியான பாடத்தை பயிற்றுவிக்கும். விரைவாக கற்கிற அமைப்புகள் மட்டுமே நிற்கும். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.