திமுகவினர்கள் 23 பேர்களை வைத்துக் கொண்டு, புறநானூற்று மேற்கோளை பொருத்திக் காட்ட முனைந்து தோற்றுப் போனார் நிர்மலா சீத்தாராமன். கொல்லன் தெருவிலேயே ஊசி விற்பனையா என்று வரவு- செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் திருக்குறளை மேற்கோள் காட்டி அசத்தினார் ஆ.இராசா. 25,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திமுகவினர்கள் 23 பேர்களை வைத்துக் கொண்டு, புறநானூற்று மேற்கோளை பொருத்திக் காட்ட முனைந்து தோற்றுப் போனார் நிர்மலா சீத்தாராமன். ஏனென்றால், பிசிராந்தையார் சினந்த வரியை விட பாஜக வரிவிதிப்பு மிக அதிகம். சுரக்கு-சேவை வரி, விற்பனையில் ஆறில் ஒரு பங்கு வசூலிக்கப் படுகிறது. தமிழ் மன்னர்கள் இருந்து கேட்டால் அதிர்ச்சி அடைவார்கள். உலகம் சுற்றும் மோடியை கால எந்திரத்தில் அமரவைத்து சங்ககாலத்து தமிழகத்திற்கு அழைத்துச் சென்று பிசிராந்தையாரைச் சந்திக்கச் செய்ய வேண்டும். நாடாளுமன்ற மக்களவையில் நேற்று வரவு-செலவு திட்டம் மீதான விவாதம் நடைபெற்றது. இவ்விவாதத்தில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசுகையில், இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில் அவர் பதிகை செய்த வரவு-செலவுத்; திட்டம் யாரராலும் ற்றுக்கொள்ள முடியாது என கூறிய இராசா, அரசின் திட்டம் என்ன? வரவு-செலவுத் திட்டத்தில் அரசு நிர்ணயித்துள்ள இலக்குகளை எட்ட செயல்திட்டங்கள் ஏதும் இல்லை என கூறினார். குடியரசுத் தலைவர் உரையையும், பொருளாதார அறிக்கையையும் படித்தேன். ஆனால் வரவு-செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற செயல்திட்டம் என ஏதுமே இல்லை என்றார். இந்த அவையில் 15 வரவு-செலவுத் திட்டங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இதுபோன்ற ஒரு வரவு-செலவுத் திட்டத்தை பார்த்ததில்லை. இந்தியப் பொருளாதாரம் வேளாண்மையை அடித்தளமாகக் கொண்டது. ஆனால், கார்ப்பரேட்டுகள் மட்டும்தான் பொருளாதாரத்தை வளர்ப்பதாக இந்த அரசு நம்புகிறது என குற்றம்சாட்டினார்.. உள்நாட்டு முதலீடு, வேளாண்மை, உள்நாட்டு தொழில்துறைகள் ஆகியவற்றைதான் நாம் நம்பவேண்டும். ஆனால் இந்த அரசு பிரத்யேகமாக அந்நிய நேரடி முதலீடுகளை மட்டுமே நம்புகிறது. அடிப்படையில் இது தவறு. பாண்டிய மன்னனுக்கு புறநானூற்றில் பிசிராந்தையார் கொடுத்த அறிவுரை பற்றியும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார். வரி எவ்வாறு வசூலிக்கப்பட வேண்டும் என்பதை மட்டுமே பிசிராந்தையார் அறிவுறுத்துகிறார். ஆனால் வரி எங்கிருந்து வசூலிக்கப்பட வேண்டுமென்பதே நமது கவலை என கடுமையாக பேசினார். யாரிடம் வரி வசூலிக்க வேண்டும், யாருக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பதற்கு திருக்குறளிலிருந்து சரியான வரிகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என கூறிய ஆ.இராசா, இயற்றலும் ஈற்றலும் காத்தலும் காத்த -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,209.
வகுத்தலும் வல்ல தரசு. என்கிறார் திருவள்ளுவர். அதன் அடிப்படையில் இந்த வரவு-செலவுத் திட்டம் படுதோல்வி அடைந்துள்ளது எனப் பேசினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



