தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் கடந்த ஆண்டே முடிக்கப்பட்டது. ஆனாலும் பல்வேறு காரணங்களால் இந்த படம் வெளியீடு ஆகாமல் இருந்தது. இந்த மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமை வெளியாகிறது என்று அறிவிக்கப் பட்டுள்ளது. 25,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் கடந்த ஆண்டே முடிக்கப்பட்டது. ஆனாலும் பல்வேறு காரணங்களால் இந்த படம் வெளியீடு ஆகாமல் இருந்தது இந்த நிலையில் இந்த படத்திற்கு உண்டான பிரச்சனைகள் ஒவ்வொன்றாக தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் இந்த படத்தின் வெளியீடு நாள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. அதன்படி சற்றுமுன், இந்த படம் இந்த மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமை வெளியீடு ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் பட விளம்பரம் அடுத்த கிழமை வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர். தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், ராணா, ஜெகன் மற்றும் சிறப்பு தோற்றத்தில் கௌதம் மேனன் நடித்துள்ள இந்தப் படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஏழு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது என்பதும் குறிப்பாக ‘மறுவார்த்தை’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தை லைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் வெளியீடு செய்கிறது -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,209.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



