Show all

நடிகை தமன்னா உதவி! ஊரடங்கில் பாதித்திருக்கும் மும்பை குடிசை பகுதிகளில் வாழும் மக்களுக்கு

10 ஆயிரம் ஏழை தொழிலாளர்களுக்கு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 50 ஆயிரம் டன் உணவு பொருட்களை தமன்னா வழங்கி உள்ளார்.

10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒரு பக்கச் சோகம். கொரோனா பரவலைத் தடுக்க அதிகாரப்பாடாக அரசு அறிவித்த ஊரடங்கிற்கு மக்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் விலையாக அவர்களின் வருமான இழப்பு மறுபக்கச் சோகமாக, பெரிதாக மக்களைப் பாதித்து வருகிறது. 

ஏற்கனவே 21 நாட்கள் இருந்த ஊரடங்கு அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள தினக்கூலி தொழிலாளர்களும், வெளிமாநில தொழிலாளர்களும் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏராளமானோர் உணவு கிடைக்காமலும் திண்டாடுகிறார்கள். 

நடுத்தட்டு மக்களின் பாதிப்புக்கென்று உதவ ஒருவர் கூட இதுவரை முன்வரவில்லை. ஆனால் உணவுக்குக் கூட வழியில்லாமல் பாதிக்கும் எழைகளுக்கு பல சமூக ஆர்வலர்கள் உதவிக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்த வகையாக சிலருக்கு நடிகை தமன்னா உதவி உள்ளார். மும்பை குடிசை பகுதிகளில் வாழும் மக்கள், அன்றாடக்கூலி தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் உட்பட 10 ஆயிரம் பேருக்கு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 50 ஆயிரம் டன் உணவு பொருட்களை தமன்னா வழங்கி உள்ளார்.

இதுகுறித்து தமன்னா கூறும்போது, “ஊரடங்கும், சமூக விலகலும் கொரோனா பரவலை தடுப்பதற்கான நல்ல நடவடிக்கை. இயல்புநிலை திரும்ப சில மாதங்கள் ஆகலாம். இதனால் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. அன்றாடம் வேலை செய்து சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். 

யாரும் பசியோடு தூங்க கூடாது என்று முடிவு எடுத்து அவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்ய அனைவரும் தாராளமாக நன்கொடை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்றார். ஏற்கனவே தெலுங்கு திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ தமன்னா ரூ.3 லட்சம் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.