சில ஊடகங்கள்! பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்பதாக, வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை முன்வைத்தது. இதன் மீது பத்து வகையான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப் பட்டிருக்கிறது! 05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நேற்று மாலையே வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியிருந்தது. இன்று பொறுமையாக யோசித்து பல்வேறு தரப்பினரும் வைத்துள்ள குற்றச்சாட்டுகளைப் பட்டியல் இட்டால் எண்;ணிக்கை பத்தினைத் தொடுகிறது. 1.கணிப்புகளில் பாஜகவிற்கு ஒதுக்கியுள்ள தொகுதிகள் எண்ணிக்;கை இயல்புக்கு பொருந்த வில்லை. கடந்த முறை தேர்தலில் கூட பாஜக தனித்து 266 தொகுதிகளில் மட்டுந்தாம் வெற்றி பெற்றிருந்தது. பாஜகவின் தேசிய சனநாயக கூட்டணி 305 தொகுதிகள் மட்டுந்தாம் வெற்றி பெற்றிருந்தன. பாஜக மீது இத்தனை அதிருப்திகள் வளர்ந்து பூதாகரமாக இருக்கும் நிலையில், இந்த முறை 306 தொகுதிகளில் பாஜக வெற்றிபெறும் என்பது இயல்புக்கு பொருந்தாது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,157.
2.இன்று பங்கு சந்தை அண்மைக்கால வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. ரொம்ப நாளாக முடங்கிக் கிடந்த பங்குச் சந்தையை உயர்த்துவதற்கு திட்டமிட்டு செய்யப் பட்ட முயற்சியே இந்தக் கருத்துக் கணிப்பு என்று சொல்லப் படுகிறது.
3.கருத்துக் கணிப்பு வெளியிட்ட ஊடகங்கள் அனைத்தும் பாஜக ஆதரவு ஊடகங்களே என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப் படுகிறது.
4.இந்தக் கருத்துக் கணிப்பில், காஞ்சிபுரத்தில் போட்டியிடாத மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இவ்வளவு விழுக்காடு வாக்குகள் கிடைக்கும் ஒரு கருத்துக் கணிப்பில் பிழையான தகவல்.
5.நேற்று மாலை 6 மணிக்கு 7வது கட்டமாக 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைகிறது. உடனே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகிறது. இதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். 59 தொகுதிகளை தவிர்த்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிட்டார்களா?
6.நான் அமமுகவில் இருக்கிறேன். நான் வாக்களித்து விட்டு வரும்போது இந்தக் கட்சிக்குதான் வாக்களித்தேன் என்று எல்லோருக்கும் தெரியும். பொதுமக்களில் இருப்பவர் ஒருவர் தான் இந்தக் கட்சிக்குதான் வாக்களித்தேன் என்று எப்படி வெளிப்படையாக கூறுவார் என்கிறார் சி.ஆர்.சரஸ்வதி.
7.கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெளியான கருத்துக்கணிப்புகளை தாண்டி அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று கருத்துக் கணிப்பின் அடிப்படையையே தகர்த்தது.
8.தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலைப் பொறுத்தவரை அதிமுக களத்திலேயே இல்லை. தேர்தல் கருத்துப் பரப்புதலில் அவர்களை பொதுமக்கள் வரவேற்கவும் இல்லை. தமிழக அரசியல் களத்தில் அமமுக - திமுக இடையேதான் போட்டி. என்ற நிலையில் அமமகவை புறக்கணித்த கருத்துக் கணிப்பு இயல்பானதில்லை.
9.கருத்துக் கணிப்பு பொது மக்களிடம் தான் பரபரப்புக் கிளப்பியதேயொழிய எந்தக் கட்சியும் ஒரு பொருட்டாகவே கருத்துக் கணிப்பை மதிக்கவில்லை.
10.வாக்குப் பதிவு இயந்திரங்களில், குளறுபடி செய்யவும், வாக்குப் பதிவு இயந்திரங்களை மாற்றவும் முன்னோட்டமாக, மக்களின் மனநிலை அறிய நூல் விட்டுப் பார்க்கும் முயற்சியே இந்த கருத்துக் கணிப்பு முயற்சி என்பதே மிகத் தலைமையான குற்றச்சாட்டாக அனைத்துத் தரப்பினராலும் வைக்கப் படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



