Show all

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு கோயில்! இந்தியாவில்; வியப்பூட்டும் தெலுங்கானா உழவரின் செயல்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு, தெலுங்கானவில் ஒரு இரசிகர்; கோயில் கட்டி கொண்டாடும் அளவிற்கு. 

05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜங்கோன் மாவட்டம் கொன்னே கிராமத்தை சேர்ந்த உழவர் புஸ்சா கிருஷ்ணா அகவை 32. தன்னுடைய வீட்டிலேயே டிரம்புக்கு 6 அடி உயர சிலை அமைத்துள்ளார்.

டிரம்ப் சிலை அமைக்க கிருஷ்ணா ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் செலவிட்டதாகவும், கிராம மக்களுக்கு விருந்து வைத்ததாகவும் அவருடைய தாயார் தெரிவித்தார்.  டிரம்பை கடவுளாக கருதி, அவரது சிலையை புஸ்சா கிருஷ்ணா அன்றாடம் வழிபட்டு வருகிறார். சிலையின் நெற்றியில் பொட்டு வைத்து, மாலை அணிவிக்கிறார். அபிஷேகம் செய்து ஆரத்தி காட்டுகிறார். அப்போது, ‘ஜெய் ஜெய் டிரம்ப்’ என்று மந்திரம் உச்சரிப்பதுபோல் கூறுகிறார்.

கடந்த கிழமை டிரம்பின் 73–வது பிறந்தநாளையொட்டி, தனது வீட்டு சுவரில் டிரம்ப் சுவரொட்டியை புஸ்சா கிருஷ்ணா ஒட்டி இருந்தார்.

இதுபற்றி கிருஷ்ணா தெரிவிப்பதாவது, டிரம்ப் ஒரு வலிமையான தலைவர். அவரது துணிச்சலான செயல்பாடு எனக்கு பிடிக்கும். எனவே, அவரை வழிபடுகிறேன். என்றாவது ஒருநாள் அவரை நான் சந்திப்பேன் எனக் கூறியுள்ளார்.  

இந்தியாவில் ஒரு தனி மனிதர் டிரம்பின் மீது இவ்வளவு மரியாதையும் பக்தியும் கொண்டிருக்கும் போது, இந்தியாவின் ஆளும் பாஜக அரசுக்கு டிரம்பைப் பிடிக்காமல் போனதும், அமெரிக்கா இடையே வர்த்தகரீதியிலான மோதல் நடந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,189.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.