மோடி பாஜக அரசின், மாநில உரிமைகள் பறிக்கும் நடவடிக்கைகளின் அடுத்த மைல்கல்லே, ஒரேதேசம், ஒரேதேர்தல்! 05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நீட் மூலமாக மாநில அரசுகளின் மருத்துவக் கல்வி உரிமை, சரக்கு-சேவை வரி மூலமாக மாநில அரசுகளின் வரி வாங்கும் உரிமை, ஆதார் மூலமாக மாநில அரசுகளின் குடும்ப அட்டை மீது அதிகாரம். ஒன்று விடாமல் மாநில அரசுகளின் அனைத்து உரிமைகளையும் பறிப்பதற்கு, மோடி அரசின் நிறைய மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. அவைகள் எல்லாம் முற்றாக நிறைவேற்றப்படும் போது, மாநில அரசுகளுக்கு ஊராட்சி கிராமப் பஞ்சாயத்துகளுக்கு இருக்கிற உரிமை கூட இருக்காது. தற்போது நடுவண் பாஜக அரசு கையில் எடுத்திருக்கும் மாநில உரிமை பறிப்பு: ஒரேதேசம், ஒரேதேர்தல். ஒரேதேசம், ஒரேதேர்தல் குறித்து ஆலோசனைகளை பெறுவதற்காக குழு அமைக்கப்படும் என்று மாநில உரிமைகள் குறித்து கவலை கொள்ளாத கட்சிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டமானது நேற்று பிற்பகல் சுமார் 3.30 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக பங்கேற்கவில்லை. அதிமுக சார்பில் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமைச்சர் சி.வி. சண்முகம் தில்லி சென்றிருந்தார். எனினும், அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், இந்த கூட்டமானது சுமார் மூன்றரை மணி நேரத்துக்குப் பிறகு நிறைவடைந்தது. இதையடுத்து, நடுவண் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தில்லியில் இந்த கூட்டம் குறித்து விளக்கம் அளிக்கையில், 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில், 21 கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். பல்வேறு காரணங்களுக்காக இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். 3 கட்சிகள் தங்களது கருத்துகளை எழுத்துப்பூர்வமாக பதிவிட்டனர். ஒரேதேசம், ஒரே தேர்தலுக்கு பெரும்பாலான கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இதில் மாற்றுக் கருத்து உள்ளது. ஆனால், இந்த சிந்தனையை அவர்கள் எதிர்க்கவில்லை. இதை செயல்படுத்தும் விதத்தை தான் அவர்கள் எதிர்க்கின்றனர். ஒரேதேசம், ஒரேதேர்தல் விவகாரம் குறித்து குறிப்பிட்ட காலவரையறைக்குள் பரிந்துரை மற்றும் ஆலோசனைகளை பெறுவதற்காக ஒரு குழு அமைக்கப்படும் என்று தலைமைஅமைச்சர் மோடி தனது உரையில் தெரிவித்தார் என்றார். மாநில உரிமைகள் குறித்த முழக்கத்தை தமிழகம் மட்டுமே இந்திய விடுதலைக்கு முன்பிருந்தே முழங்கி வருகிறது. ஆனால், கண்ணை திறந்து கொண்டே, செயலலிதாவிற்கு பிந்தைய அதிமுகவால் இரண்டு தலையாயத்துவமான உரிமைகளான மருத்துவக் கல்வி உரிமை, மாநில அரசின் வரி வாங்கும் உரிமை இழந்து விட்டது தமிழகம். தங்கள் குடும்பங்களுக்கான ஒப்பந்தங்களை பெற்று சொத்து சேர்த்துக் கொள்வதற்காக மட்டுமான இந்த அதிமுக அரசு இருக்கும் வரை தமிழக உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோவதை யாராலும் தடுத்து விட முடியாது. பாஜகவின் சட்டப்பாதுகாப்பில் இருக்கும் இந்த அரசை, யார்தான், என்னதான் என்னசெய்து விட முடியும்? ஒரேதேசம், ஒரேதேர்தல் திட்டம் அமுலுக்கு வருமானால், அதிமுக ஆட்சி காலம் முடிந்து, அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் தமிழகத்தில் -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,189.
ஆளுநர் ஆட்சியே அமுலில் இருக்கும். இதை உணர்ந்து, அதிமுக தரப்பினர் தங்கள் குடும்பத்திற்கு சொத்து சேர்த்தது போதும், தமிழகத்திற்காக ஏதாவது செய்யலாம் என்று நினைத்து- ஒரேதேசம், ஒரேதேர்தல் திட்டத்திற்காவது எதிராக நிற்க வேண்டும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



