ஊரடங்கை மேலும் நீட்டிக்கிறது முதலாவது மாநிலமாக தெலுங்கானா. 16,வைகாசி (மே29)வரை ஊரடங்கு தொடரும் என அறிவித்திருக்கிறது. வெள்ளிக்கிழமை என்பதால் மேலும் இரண்டு நாட்கள் தொடரலாம். 28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஊரடங்கை மேலும் நீட்டிக்கிறது முதலாவது மாநிலமாக தெலுங்கானா! 16,வைகாசி (மே29)வரை. வெள்ளிக்கிழமை என்பதால் மேலும் இரண்டு நாட்கள் தொடரலாம் என்று கருதப்படுகிறது. மேலும் சனிக்கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும் அட்டமி நவமி திங்கட் கிழமை முகூர்த்த நாள் கூட. அன்று உறுதியாக ஊரடங்கை முடித்துக் கொள்ளுங்கள் என்றும் யோசனைகள் சொல்லப்படலாம். இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா தொடர்ந்து இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, டெல்லி, குஜராத், மத்திய பிரதேசம், தமிழகம், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, நடுவண் அரசு அறிவித்திருந்த ஊரடங்கு 04,வைகாசி (மே 17) அன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், இன்று பிற்பகல் முதல் தலைமைஅமைச்சர் மோடி, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு குறித்த விவாதம் நடத்தப்பட உள்ளது. மேலும், அசாம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க நடுவண் அரசுக்கு கோரிக்கை விடுக்க உள்ளன. இந்த நிலையில், தெலுங்கானாவில் ஊரடங்கை 16,வைகாசி (மே29) வரை நீட்டிக்க அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு 1196 குணமானவர்கள் 750 கொரோனாவிற்கு பலியானவர்கள் 30 பேர்கள். என்ற நிலையில், இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார். மேலும், மாநகராட்சிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் எனவும், கிராமப்புறங்களில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபானக் கடைகளை தவிர்த்து கட்டாயத் தேவை கடைகள் மற்றும் இதர சில கடைகளை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.