Show all

பேய் குறும்பட போட்டி! ஹிந்தி நடிகர் சாருக்கான் அறிவித்திருக்கிறார்

பேய்ப்பட போட்டியில் வென்றால் தன்னோடு பேசலாம் என்கிறார் ஹிந்தி நடிகர் சாருக்கான்.

28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இளம் இயக்குனர்களுக்கு வீட்டிலேயே பேய்ப்படம் எடுக்கும் போட்டியை ஹிந்தி நடிகர் சாருக்கான் அறிவித்துள்ளார்.
ஹிந்தி நடிகர் சாருக்கான் ஊரடங்கினால் தவிக்கும் அவர் பகுதி மக்களுக்கு உதவி பொருட்கள் வழங்கி வருகிறார். இணையதள இசை நிகழ்ச்சியில் பங்கேற்றும் நிதி திரட்டினார். இந்த நிலையில் இளம் இயக்குனர்களுக்கு வீட்டிலேயே பேய்ப்படம் எடுக்கும் போட்டியை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கீச்சுவில் அவர் கூறியிருப்பதாவது: ஊரடங்கில் அனைவரும் வீட்டில் இருக்கிறோம். நமக்கு நேரம் கிடைத்துள்ளது. நிறைய பேய்ப்படங்கள் பார்த்து இருப்போம். இந்த நேரத்தில் நம்மால் வேடிக்கையாக பயமுறுத்தும் வகையில், ஒரு உள்ளரங்கு படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்ற சிந்தனையில் பேய்ப்பட போட்டியை அறிவிக்கிறேன். 

இந்தப் பேய்ப்படத்தை எடுக்க எந்தவிதமான படக்கருவியையும் பயன்படுத்தலாம். பயமுறுத்துவதற்கு எந்த பொருளையும் பயன்படுத்தலாம். ஆனால் அந்தப் பொருள் வீட்டில் இருக்க வேண்டும். தனிநபர் படமாகவோ அல்லது சமூக இடைவெளியுடன் பலர் இடம்பெறும் படமாகவோ இருக்கலாம். படத்தை வருகிற திங்கட் கிழமைக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.