Show all

இணைய ஆர்வலர்கள் அச்சத்தில்! ஸ்டாலின் சவாலை ஏற்று களமிறங்கியுள்ள எச்.ராஜா; இணையத்தை அசிங்கப் படுத்துவாரோ

13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் திமுகவின் தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். அதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஸடாலின், இந்தியா முழுவதும் காவி வண்ணம் பூச நினைக்கும் மோடி அரசிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்று பேசினார். 

இதனை சாவலாக ஏற்றுக்கொண்ட எச்.ராஜா, திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். சவாலை ஏற்க மோடியின் காவித் தொண்டர்கள் தயாராகவே உள்ளோம். களம் காண்போம் என்று கீச்சுவில் பதிவிட்டுள்ளார். இந்த அளவில் சரி. வழக்கம் போல எச்.ராஜா அசிங்க அசிங்கமாக எழுதி இணையத்தை அசிங்கப் படுத்தாமல் இருக்க வேண்டுமே என்று, இணைய ஆர்வலர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,894.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.