தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்களை போன்று கர்நாடகாவில் 198 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் அரசால் திறக்கப்பட்டுள்ளன. இந்திரா உணவகங்கள்; என பெயரிடப்பட்டுள்ள இந்த மலிவு விலை உணவகங்களை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் திறந்து வைத்தார். பின்னர் பெங்களூருவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல், இத்திட்டம் படிப்படியாக மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றார். கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், தேங்கிக் கிடக்கும் குப்பைகள், சரிந்து வரும் வேலைவாய்ப்புக்கள், குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளால் ஆளும் கட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை மாற்றவே இந்த மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



