மருத்துவ படிப்பு நுழைவு தேர்வில் (நீட்) தமிழக மாணவர்களுக்கு ஓராண்டு விலக்கு அளிக்க நடுவண் அரசு முன்வந்துள்ளது. இதற்கான அவசர சட்ட முன்வடிவை தமிழக அரசு தயாரித்து நடுவண் உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்துள்ளது. இந்த சட்ட முன்வடிவு தொடர்பாக தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணு கோபாலிடம் நடுவண் அரசு கருத்து கேட்டது. நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்கலாம் என வேணுகோபால் விளக்கம் அளித்து உள்ளார். விளக்கத்தை நடுவண் உள்துறை மற்றும் சுகாதாரத் துறைக்கு அனுப்பி உள்ளார். தமிழகத்திற்கு ஒரு ஆண்டு விலக்கு அளிக்கும் அவசரச்சட்டம் தொடர்பான முடிவு நாளை காலை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



