Show all

தமிழக அரசு பாஜக பிடியில் இருந்து விடுபட்டு விடுதலை பெற வேண்டும்: திருநாவுக்கரசு

தமிழக அரசு பாஜக பிடியில் இருந்து விடுபட்டு விடுதலை பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

71-வது விடுதலை நாளையொட்டி இராயபேட்டையில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் நாடு அரசாங்கம் விடுதலை பெற வேண்டும். நடுவில் ஆளும் பாஜக பிடியில் இருந்து விடுபட்டு விடுதலைக் காற்றை சுவாசிக்க வேண்டும்.

தற்போது இருக்கும் அதிமுகவிற்கு பிளவுபடுத்தப்பட்;ட அணிகளை இணைக்கும் பணி செய்யவே நேரம் போதவில்லை. என தெரிவித்துள்ளார்.

மேலும் இப்பொழுது இருக்கும் முதலமைச்சருக்கும் முன்னாள் இருந்த முதலமைச்சரும் சரி அமைச்சர்களும் சரி டெல்லிக்கு சென்று பிரதமரை சந்திப்பதோடு சரி மக்கள் நலனில் கவனம் செலுத்துவதில்லை. நீட் தேர்வு, வேளாண்பெருமக்கள் போன்ற பல பிரச்சனைகளில் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுப்பதில்லை.

கட்டப் பஞ்சாயத்து மட்டும் தான் நடைபெறுகிறது. ஆட்சியைத் தக்க வைத்து கொள்ள டெல்லி சென்று மண்டி இடுகிறார்கள். தொடர்ந்து அதிமுக அரசு செயல்படாத அரசாகவே இருக்கிறது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்கிற பெயரில் உட்கட்சி குழப்பங்கள் நடைபெறுகிறது. எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.