இந்தியாவில் தலைசிறந்த கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று வெளியிட்டார். அதன்படி, இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரி சென்னை கல்வி நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. முதல் பத்தில் ஒன்பது, பத்து இடங்களில் தமிழகமே சாதித்துள்ளது. 26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் உள்ள தலைசிறந்த கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் இந்த தரவரிசையின் அடிப்படையில், கல்லூரிகளை தேர்ந்தெடுப்பதற்கு இது உதவிகரமாக இருக்கிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டின் தலைச்சிறந்த பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் நேற்று வெளியிட்டார். மொத்தம் 9 பிரிவுகளின் கீழ் இந்தத் தரவரிசைப் பட்டியல் தனித்தனியாக அறிவிக்கப்பட்டது. அவை, தலைச்சிறந்த பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், தனியார் கல்வி நிறுவனங்கள், மருந்தியல், மருத்துவம், கட்டிடக்கலை, சட்டக்கல்லூரி, அனைத்தும் என மொத்தம் 9 தரவரிசைப்பட்டியல் உள்ளது. நடப்பு ஆண்டில் முதல் பத்து இடத்தைப் பிடித்த பொறியில் கல்லூரிகள்: 1.இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரி சென்னை 2.இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரி டெல்லி 3.இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரி மும்பை 4.இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரி கோரக்பூர் 5.இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரி கான்பூர் 6.இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரி ரூர்கி 7.இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரி கௌகாத்தி 8.இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரி ஹைதராபாத் 9.அண்ணா பல்கலைக்கழகம் சென்னை 10.இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரி திருச்சி -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,117.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.