Show all

இன்னுமொரு செயலலிதா-சசிகலா வரலாற்றுப்படம்!

செயலலிதா, சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி பல படங்கள் உருவாகி வரும் நிலையில், புதிய படம் பற்றிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கான இயக்குனர்கள் பட்டியலில் பாரதிராஜா, விஜய் மற்றும் பிரியதர்சினி ஆகியோர் இருந்தனர்.

விஜய் இயக்கும் 'தலைவி' படத்தில், செயலலிதாவாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேசி வந்தனர். ஹிந்தி நடிகைகள் வித்யா பாலன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் இந்த வேடத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தனர். இந்நிலையில் கங்கனா ரணாவத் நடிப்பது உறுதியானது. 

பிரியதர்சினி தன் செயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை அறிவித்தார். இவர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். 'த அயர்ன் லேடி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க நித்யாமேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவை தவிர கவுதம் மேனன் இயக்கத்தில் குயின் என்ற தலைப்பில் இணைய தொடராக செயலலிதா வாழ்க்கை படம் உருவாகிறது.

தமிழ் இயக்குனர்களோடு தெலுங்கு இயக்குனர்களும் செயலலிதா வாழ்க்கையை படமாக்க முயற்சி செய்து வருகின்றனர். தெலுங்கு பட உலகில் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் ராம் கோபால் வர்மா. இவர் செயலலிதா வாழ்க்கை வரலாற்றை சசிகலாவை முன்னிறுத்தி இயக்கப்போவதாக அறிவித்தார். சசிகலா என்ற பெயரில் சசிகலாவின் படத்தையே சுவரொட்டியில் பயன்படுத்தி இருந்தார்.

இந்தப் படங்களுக்கு இடையே சசிலலிதா என்ற பெயரில், இன்னொரு படம் உருவாகிறது. தமிழ்நாடு தெலுங்கு யுவ சக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி செயலலிதாவின் வாழ்க்கையை படமாக தயாரித்து இயக்குகிறார். இப்படத்தின் முதல் பார்வை நேற்று வெளியிடப்பட்டது. இந்த படம், இரண்டு பாகமாக உருவாகிறது. படத்தின் சுவரொட்டியில் செயலலிதா சசிகலா இருவரின் படங்களும் உள்ளன. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,117.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.