Show all

உப்பு சப்பில்லாத பாஜக தேர்தல் அறிக்கை

பாஜகவின் உப்பு சப்பில்லா தேர்தல் அறிக்கையில், தாங்கள் ஆட்சிக்கு மீண்டும் வந்தால் இந்தியாவில் தேர்தல் கிடையாது என்கிற அம்சம் தெளிவாக புரிகிறது என்று நையாண்டி செய்கிறார் திருமுருகன் காந்தி. 25,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக தேர்தல் அறிக்கை முதன்மையான அம்சங்கள் வருமாறு:

0.சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்தும் முயற்சியில் பள்ளிகள் அளவில் கற்பித்தல் அதிகரிக்கப்படும்.

0.ஒரு ரூபாயில் சானிட்டரி நாப்கின் வழங்க நடவடிக்கை  என கூறப்பட்டு உள்ளது.

0.அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நாட்டில் செயல்பட்டு வரும் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்.

0.நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் என்ற இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

0.வீடுகள் அனைத்திற்கும் குழாய் தண்ணீர் இணைப்பு வழங்கப்படும்.

0.முத்ரா கடன் திட்டம் மூலம் தொழில்முனைவோருக்கு கடன் 

0.கருப்பு பணம் மற்றும் பினாமி சொத்துகளுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் தொடரும்.

0.விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும்.

0.அடுத்த 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும்.

0.சரக்கு-சேவை வரி நடைமுறைகள் எளிதாக்கப்படும்.

தேர்தல் அறிக்கை குறித்து மோடி கூறும்போது, மக்கள் பிரச்சினைகளை  அறிந்து சிறப்பான தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது என்றார்.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்ததாவது:

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பாஜக தேர்தல் அறிக்கை குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இதுகுறித்து பேசிய அவர், பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நடுவிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் தேர்தல்- குடிஅரசு தத்துவத்திற்கு எதிரானதாகும். இது எப்படி சாத்தியம். 

நடுவண் அரசில் ஆட்சி கவிழ்ந்தால் அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி கவிழ்ந்து விடுமா? ஏதாவது ஒரு மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்தால் நடுவண் அரசுக்;கு தேர்தல் வரும் வரை குடியரசுத் தலைவர் ஆட்சி தான் நடைபெறுமா? தேர்தல் என்ற முறையை ஒழிக்க பாஜக முயற்சித்து வருகிறது. அடுத்து மோடி ஆட்சிக்கு வந்தால், இதுதான் நிலைமை. 

தேர்தல் ஆணையத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு பாஜக செயல்படுகிறது. இந்திய ராணுவம் என்பதை மோடியின் ராணுவம் என்று வெளிப்படையாக பேசுகின்றனர். அப்படிப்பட்ட நபரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு செய்ய மறுக்கிறது. அதாவது இங்கிருக்கும் ராணுவத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கப் போகிறார்கள்.

நமது உழவர்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் எந்தவித நலத்திட்டங்களையும் இன்றைய தேர்தல் அறிக்கையில் பாஜக அறிவிக்கவில்லை. பொருளாதார தரவுகளின் அடிப்படையில் ஒரு வேலைவாய்ப்பு திட்டத்தையும் முன்வைக்கவில்லை. கருத்துப்பரப்புதலில் மோடி எப்படி வாக்குறுதிகளை அள்ளி வீசுவாரோ, அப்படி இருக்கிறது இந்த தேர்தல் அறிக்கை. என்கிறார் திருமுருகன் காந்தி.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,116.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.