Show all

கண்டுகொள்ள ஆள் இல்லாமல் டெல்லியில் 71வது நாளாக தமிழக உழவர்கள் போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக உழவர்கள், டெல்லி ஜந்தர் மந்தரில், கடந்த 71வது நாளாகப் போராட்டம் நடத்திவருகின்றனர். உழவர்களின் சிரமங்களைத் தெரிவிக்கும் வகையில், நூதனமான போராட்டங்களை யெல்லாம் நடத்திக்கொண்டுள்ளனர்.

நேற்று உழவர்கள் வங்கிகளில் பெற்ற கடன் விவர அட்டைகளை கழுத்தில் கட்டி போராட்டம் நடத்தினர்.

கடன் விவரம், நிலம் உள்ளிட்ட விவரங்கள் அட்டைகளில் எழுதப்பட்டிருந்தன. மேலும், தங்கள் வங்கிக் கணக்கில் தலா ரூ.15 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது.

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துபவர்கள் உழவர்கள் அல்ல என சிலர் விமர்சனம் செய்ததாகவும், அவர்களுக்குத் நாங்கள் உழவர்கள்தான் என்பதைத் தெரியப்படுத்தவே, கழுத்தில் அட்டைகளைத் தொங்க விட்டதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.