டெல்லிக்கு தமிழகம் பற்றி ஒன்றும்; தெரிவதில்லை யென்றும், தனது அரசியல் வருகைக்குப் பிறகு தமிழகத்திற்கு நல்ல நாள் உருவாகும் என நம்புவதாகவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கும், டெல்லிக்குமான இடைவெளி தொடர்ந்து இருந்து கொண்டேதான் உள்ளது. தனித்தமிழ்நாடு கேட்ட அண்ணாதுரை, பின்னர் அக்கோரிக்கையை கைவிட்டபோதிலும், தனித்தமிழ்நாடுக்கான கோரிக்கைகள் அப்படியேத்தான் இன்னும் உள்ளது என்று தெரிவித்தார் அல்லவா? நானும் அதையேத்தான் சொல்கிறேன். தனித்தமிழ்நாடு கோரிக்கை அப்படியேத்தான் உள்ளது என்று கூறுவதால் இந்தியாவைவிட்டு தனியாக செல்ல வேண்டும் என்பது பொருள் கிடையாது. தமிழகத்திற்கு என்ன பிரச்சினை என்பது குறித்து டெல்லி பேச வேண்டும் என்பது தான். உரையாடல்தான் அவசியம். இப்போதும் உரையாடல் உள்ளது. ஆனால் அது ஒற்றை வழி உரையாடல். கேட்டு தெரிந்துகொள்ளும் உரையாடல் கிடையாது. அதைப்போலத்தான் தமிழகத்திற்கும் டெல்லி என்றால் அச்ச உணர்வு உள்ளது. நல்ல திட்டமாகவே இருந்தால் கூட டெல்லி கொண்டுவந்தாலே, அதை அச்சத்தோடு பார்க்கும் நிலைதான் தமிழகத்தில் உள்ளது. மக்களுக்கு உணவைக் கொடுங்கள், எதை சாப்பிட வேண்டும் என்ற மெனுவை கொடுக்காதீர்கள். இந்தியா போன்ற ஒரு நாட்டில், உணவு கிடைப்பதே கடினமாக உள்ளபோது, மெனுவை நீட்டாதீர்கள். நானும் முன்பு மாட்டிறைச்சி சாப்பிட்டேன், இப்போது சாப்பிடுவதில்லை, அதெல்லாம் தனிப்பட்ட விசயம். மோடி முயற்சி செய்கிறார் பிரதமர் மோடி முயற்சிகளை எடுத்து வருகிறார். முயற்சிகளை செய்துதான் ஆக வேண்டும். ஆனாலும் தமிழகத்திற்கு நன்மை கிடைக்கவில்லை. கண்டிப்பாக நான் சொல்வேன், தமிழகத்திற்கு நல்ல நாள் பிறக்கவில்லை. நான் அரசியல் பிரவேசம் செய்த பிறகு நல்லநாள் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். நான் ரஜினிகாந்த்திடம் அவ்வப்போது பேசிக்கொண்டுதான் உள்ளேன். நாங்கள் பாலச்சந்தரிடமிருந்து உருவாகி வந்தவர்கள். ரஜினிகாந்த் என்னுடைய நண்பர்தான். நான் ஏற்கனவே ரஜினிகாந்த்திடம் அரசியலுக்கு வருவது குறித்து தெரிவித்துவிட்டேன். எப்போது இந்த முடிவை எடுத்தீர்கள் என என்னிடம் அவர் கேட்டார். சில காலம் முன்பே எடுத்துவிட்டேன் என்று அவரிடம் தெரிவித்தேன். நான் எப்போது கட்சி தொடங்குவேன் என நேரம் குறிப்பிட முடியாது ஆனால் தொடங்குவேன் என்கிறார் கமல்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



