Show all

மூன்றாவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. சென்னையில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியிலும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது ஒரு நாள் போட்டி நேற்று இந்தூர், ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 293 ரன் குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக பிஞ்ச் 124 (125 பந்து, 12 பவுண்டரி, 5 சிக்சர்) ரன்களும், ஸ்மித் 63 (71 பந்து. 5 பவுண்டரி) ரன்களும் குவித்தனர். இந்திய பந்துவீச்சில் குல்தீப், பூம்ரா தலா 2, ஹர்திக், சாஹல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

இதைத் தொடர்ந்து, 294 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ரகானே, ரோகித் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ரோகித் 71 (62 பந்து. 6 பவுண்டரி, 4 சிக்சர்) ரன்களும் ரகானே 70 (76 பந்து, 9 பவுண்டரி) ரன்களும் குவித்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இறுதியாக இந்திய அணி 47.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 294 ரன் எடுத்து வென்றது. மணிஷ் பாண்டே 36 ரன், எம்.எஸ்.டோனி 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக  ஹர்திக் 78 (72 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) ரன்கள் குவித்தார். இந்த வெற்றி மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி. 4வது ஒருநாள் போட்டி பெங்களூருவில் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.