Show all

தொடரும் பாஜகவின் மேலாதிக்க மனநிலை! தமிழக ஆளுநர் புரோகித், புதுவை ஆளுநர் கிரண்பேடி வரிசையில் தமிழிசையும்.

ஆளுநர் என்பவர் மாநிலத்திற்கும், இந்தியக் கூட்டாட்சிக்கும் பாலமாக இருந்து மாநில உரிமைகளுக்கு குரல் கொடுத்துக் கொண்டிருந்த காலம் போய், பாஜக இந்தியக் கூட்டாட்சியில் பாஜகவின் மேலாதிக்கத்தை திணிக்கும் மனநிலையை முன்னெடுப்பவர்களாகி விட்டனர் மாநில ஆளுநர்கள். தமிழக ஆளுநர் புரோகித், புதுவை ஆளுநர் கிரண்பேடி வரிசையில் தமிழிசையும் இணைவதற்கான வாய்ப்புகளை தெலுங்கான மக்களும், தலைவர்களும் சாடி வருகின்றார்கள்.

01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்போவதாக அறிவித்து இருக்கிறார். இது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

ஆளுநர் என்பவர் மாநிலத்திற்கும், இந்தியக் கூட்டாட்சிக்கும் பாலமாக இருந்து மாநில உரிமைகளுக்கு குரல் கொடுத்துக் கொண்டிருந்த காலம் போய், பாஜக இந்தியக் கூட்டாட்சியில் பாஜகவின் மேலாதிக்கத்தை திணிக்கும் மனநிலையை முன்னெடுப்பவர்களாகி விட்டனர் மாநில ஆளுநர்கள். தமிழக ஆளுநர் புரோகித், புதுவை ஆளுநர் கிரண்பேடி வரிசையில் தமிழிசையும் இணையப் போகின்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், புதுவை ஆளுநர் கிரண்பேடி போன்றோர் நேரடி ஆய்வு பணிகளை மேற்கொண்ட நிகழ்வுகள் சர்ச்சையை ஏற்படுத்தின.

இப்போது அதேபோல் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்போவதாக அறிவித்து இருக்கிறார். இது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

தமிழிசை மக்களை நேரடியாக சந்திப்பேன் என்று கூறிய கருத்து ஆளுநர் அதிகாரத்தை மீறும் செயல் என்று பலரும் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர்.

அதில் ஒருவர் பாரதிய ஜனதாவை தெலுங்கானாவில் வளர்ப்பதற்காக மாநில அரசுக்கு இணையாக மற்றொரு அரசை நீங்கள் நடத்தப்போகிறீர்களா? என்று கேட்டுள்ளார்.

மற்றொருவர் குறிப்பிட்டுள்ள கருத்தில் நீங்கள் மக்கள் பிரதிநிதி அல்ல. அரசியல் அமைப்பு பதவியாக நீங்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறீர்கள். உங்களுடைய பணிகள் அரசியல் சாசன சட்டப்படி குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுக்கப்பட்டு இருக்கிறது என்று கூறி உள்ளார்.

இந்த பிரச்சனை தொடர்பாக ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைமை நேரடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே தமிழிசை தனது கருத்தை ஆளுநருக்கான கீச்சு தளம் மூலமாக சொல்லவில்லை. அவர் ஏற்கனவே பாரதிய ஜனதா தலைவராக இருந்த போது பயன்படுத்திய கீச்சுவில்தான் கருத்து சொல்லப்பட்டு இருப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,279.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.