Show all

அமெரிக்காவை ஒப்பிட்டு பெருமதம் கொள்வதில் எச்சரிக்கை மோடி அவர்களே! டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு இறக்கத்தில் அல்லவா?

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு மளமளவென குறைந்து வருகிறதே என்று இந்தியப் பொருளாதார அறிஞர்கள் கவலை தெரிவித்து வரும் வேளையில், 133 ஆண்டுகால அமெரிக்க சுதந்திர தேவி சிலையோடு 11 மாத சர்தார் படேல் சிலையை ஒப்பிட்டு மோடி பெருமை கொள்ள வேண்டிய தேவை என்ன இருக்கிறது? என்ற கலாய்ப்பு இணையத்தில் தீயாகி வருகிறது.
 
01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நியூயார்க்கில் அமைக்கப்பட்டு 133 ஆண்டுகாலமான  சுதந்திர தேவி சிலையையும், குஜராத்தில் நர்மதா ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டு 11 மாதமான சர்தார் படேல் சிலையையும் ஒப்பீடு செய்து இந்தியத் தலைமை அமைச்சர் மோடி பேசியுள்ளார்.

மோடியின் 69-வது பிறந்தநாளை பாஜகவினர் நேற்று கொண்டாடினர். பிறந்த நாளில் சொந்த மாநிலமான குஜராத் சென்ற மோடி அங்குள்ள நர்மதா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையை பார்வையிட்டார். 
 
இதையடுத்து மோடி அந்தப் பகுதியில் நிறுவப்பட்டுள்ள, சர்தார் வல்லபாய் பட்டேல் உருவச் சிலையைப் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது கூட்டத்தில் பங்கேற்று பேசியபோது:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைக்கப்பட்டுள்ள 133 ஆண்டுகாலமான  சுதந்திர தேவி சிலையை பார்வையிட தற்போது அன்றாடம் 10 ஆயிரம் பேர்கள் வருகை தருகின்றனர். ஆனால், இங்கு அமைக்கப்பட்டு 11 மாதமே ஆகியுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை காண அன்றாடம் 8 ஆயிரத்து 500 பேர் வருகை தருகின்றனர் என்று குறிப்பிட்டு பெருமிதமடைந்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,279.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.