Show all

74வது நாளாக நீடிக்கும் தமிழக உழவர்கள் போராட்டம் இன்று மோடி வீட்டின் முன்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், உழவர்கள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு உழவர்கள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

டெல்லியில் தமிழக உழவர்கள் மேற்கொண்டுள்ள இந்த இரண்டாவது கட்ட போராட்டம் இன்று 74வது நாளாக நீடிக்கிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வீட்டின் முன்பு உழவர்கள்  போராட்டம் நடத்தினர். பிரதமர் வீட்டின் முன்பு சாலையில் படுத்து அவர்கள் உருண்டனர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தை கைவிட வலியுறுத்தி நெருக்கடி அளித்தனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த உழவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.