இந்திய ராணுவத்தினர் மியான்மர் எல்லையைத் தாண்டி, உளவுத்துறையின் தகவலை அடுத்து, இன்று அதிகாலை தனி நாடு கோரி வரும் தேசிய சோஷியலிச நாகாலாந்து கவுன்சில் இயக்கத்தினர் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். தேசிய சோஷியலிச நாகாலாந்து கவுன்சில் இயக்கத்தைச் சேர்ந்த ஏராளமான போராளிகள் உயிரிழந்துள்ளனர். துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டதில் இந்திய தரப்பில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. 70 ராணுவ வீரர்களைக் கொண்ட படைப்பிரிவு இந்த துல்லியத் தாக்குதலில் ஈடுபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான போராளிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் கொல்லப்பட்ட போராளிகளின் எண்ணிக்கை குறித்த தகவல் முழுமையாக கிடைக்கவில்லை. தற்போதைய தாக்குதலையும் சேர்த்து, மியான்மர் எல்லையில் துல்லிய தாக்குதல் இரண்டாவது முறையாக நடைபெற்றுள்ளது. முன்னதாக 2015-ல் ஜூன் மாதம் நாகாலாந்து போராளிகள் முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தப்பட்டது. எல்லை தாண்டாமல் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துள்ளதாக ராணுவம் அறிவித்துள்ளது. இத்தாக்குதலுக்கும், முதலில் இந்திய ராணுவத்தின் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என்றே கூறப்பட்டது. ஆனால், தற்போது இது ஒரு ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ தாக்குதல் இல்லை என இந்திய ராணுவ அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



