ஆண்டு தோறும் பாகிஸ்தானில் ஏற்படும் தக்காளிப் பற்றாக்குறையை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலம் சரிகட்டிவந்தது பாகிஸ்தான். ஆனால், தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு சுமூகமாக இல்லாததால், இந்தியாவில் இருந்து செல்லும் தக்காளி சுமையுர்தி வண்டிகளை அந்நாட்டு எல்லைக்குள் நுழைய பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. பாகிஸ்தானில் தக்காளி உற்பத்தி குறைந்திருப்பதால் ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு காரணமாக, ஒரு கிலோ தக்காளி ரூ.120 முதல் ரூ.300 வரை விற்கப்படுகிறது. கடும் தட்டுப்பாடு நிலவினாலும், இந்தியாவில் இருந்து தக்காளியை இறக்குமதி செய்யப்போவதில்லை என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. இதனால், பலுசிஸ்தானில் விளையும் தக்காளி, காய்கறி சந்தைக்கு வரும் வரை வியாபாரிகளும், பொதுமக்களும் காத்திருக்க வேண்டும் என்று அந்நாட்டு உணவுத் துறை அமைச்சர் கூறினார். பாகிஸ்தானில் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்திருப்பது சமூக வலைத்தளங்களிலும் எதிரொலிக்கிறது. தக்காளியை புறக்கணிப்போம் என்பது போன்ற வாசகங்கள் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



