Show all

டிவிஎஸ் மின்சார ஸ்கூட்டர் ஐகியூப் புதிய விலை ரூ.1,01,000! ரூபாய் 11,250 விலை குறைக்கப்பட்ட நிலையிலும்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் விலையை ரூபாய் 11,250 குறைத்து இருக்கிறது.

03,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் விலையை ரூ. 11,250 குறைத்து இருக்கிறது. 

விலை குறைப்பின் படி டிவிஎஸ் ஐகியூப் புதிய விலை ரூ. 1.01 லட்சம் என மாறி இருக்கிறது. தற்போது டிவிஎஸ் ஐகியூப் வண்டிகள் பெங்களூரு மற்றும் டெல்லி என இரு நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கட்டணத்தில் மூன்று ஆண்டுகள் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர் மாற்றுறுதியும் வழங்கப்படுகிறது.

டிவிஎஸ் ஐகியூப்பில் 4.4கிலோவாட் மின்சுழட்டி, லித்தியம் அயனி மின்கலம் சிப்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் ஒருமுறை மின்னேற்றம் செய்தால் அதிகபட்சம் 75 கிலோமீட்டர் வரை செல்லும். இது அதிகபட்சமாக மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.