கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு ஒரு தடவை தடுப்பூசியே அதிக பாதுகாப்பை அளிப்பதாக நலங்குத்துறை தெரிவித்து வருகிறது. 03,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு ஒரு தடவை தடுப்பூசியே அதிக பாதுகாப்பை அளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், இவ்வாறு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டாலும் உயிரிழக்கும் சூழலை தடுப்பூசி குறைக்கும் எனக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், கோவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் 3 மாதங்களுக்கு தடுப்பூசி எடுத்துக்கொள்ளக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொற்றில் இருந்து மீண்டவர்கள் ஒரு தடவை தடுப்பூசி போட்டுக்கொண்டாலே அதிக பாதுகாப்புடன் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐதராபாத்தின் ஏ.ஐ.ஜி மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில், கோவிட் தொற்றிலிருந்து மீண்ட மக்களுக்கு, ஒரு தடவை தடுப்பூசியே நிறைய பாதுகாப்பை அளிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டதற்கு மூன்று மாதங்களுக்குப் பின்பு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கோவிட் தொற்று பாதிப்பு குறைவாகவே இருப்பதாக நலங்குத்துறை தெரிவித்து வருகிறது. அவர்களிடம் நடத்திய ஆய்வில், அவர்களுக்கு, ஒரு தடவை தடுப்பூசி கொடுக்கப்பட்டதிலேயே, நிறைய எதிர்மெய்கள் உடலில் உற்பத்தி செய்யப்பட்டன என்று ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தின. அதேசமயம் தொற்று ஏற்படாதவர்களில், எதிர்மெய்கள் குறைவாகவே இருந்தன. கோவிட்டால் பாதிக்கப்படுகையில், உடல் அதை எதிர்த்துப் போராடுவதற்கு எதிர்மெய் என்னும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. எதிர்மெய்களை உருவாக்கும் இந்த செயல்முறை நோயாளியின் நினைவக செல்களில் பதிவு செய்யப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், மீண்டும் தொற்று ஏற்பட்டால், இந்த நினைவக செல்கள் மீண்டும் செயல்படுகின்றன மற்றும் எதிர்மெய்களை விரைவாக உருவாக்க முடிகிறது. இவ்வாறு அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.