நடுவண் பாஜக அரசு, இந்திய மக்களுக்காக ஒதுக்கும் 20இலட்சம் கோடியை- 18 அகவைக்கு குறைவானவர்களுக்கும், படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கும், வங்கியில் வைப்பாக பணம் போட்டு, வட்டி வாங்கிப் பயனடைகிற வகையாகவும், மற்றவர்களுக்கு வங்கிக் கணக்கில் போட்டு, அவர்கள் குடும்ப வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் முன்னெடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று கணக்கிட்டுப் பார்த்தால் தெரியவருகிறது. 02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: உண்மையிலேயே நடுவண் பாஜக அரசு, இந்திய மக்களுக்காக 20இலட்சம் கோடியை ஒதுக்க முடியுமானால் ஏன் இப்படி செய்யக்கூடாது? இந்தியாவின் மக்கள் தொகை இன்றைய நிலையில், தோராயமாக 1,37,82,84,863 என்று தெரிய வருகிறது. நடுவண் அரசு அறிவித்துள்ளது 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களாம். அந்தத் தொகையை திட்டங்கள், அதற்கு அதிகாரிகள், ஏராளமான நிருவாக நடவடிக்கைகள், பொருளாதார இழப்புகள் என்று முன்னெடுப்பதற்கு மாற்றாக அந்தத் தொகையைப் பிரித்து இந்தியாவின் ஒவ்வொரு குடிமக்களின் வங்கி கணக்கில் போட்டு விட்டால் என்ன? 18 அகவைக்கு குறைவானவர்களுக்கும், படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கும், வங்கியில் வைப்பாக பணம் போட்டு, வட்டி வாங்கிப் பயனடைகிற வகையாகவும், மற்றவர்களுக்கு வங்கிக் கணக்கில் போட்டு, அவர்கள் குடும்ப வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் முன்னெடுத்தால், எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்பதை அவர்கள் ஒவ்வொருவருக்கும் வரும் தொகையைக் கணக்கிட்டுப் பார்த்தால் புரிந்து விடும். கணக்கிட்டு பார்ப்போமா? நடுவண் பாஜக அரசு வழங்கவிருக்கிற தொகுப்புத் தொகை: 20இலட்சம் கோடி. (20000000000000) சிறப்பு! குடும்பத்தில் கணவன், மனைவி இருவருக்கும் சேர்த்து ரூ29020 கிடைக்கும். இரண்டு குழந்தைகள் இருந்தால் இரண்டு குழந்தைகளுக்கும் வைப்புத் தொகையாக ரூ29020 கிடைக்கும். இதில் கிடைக்கும் பலன் நடுவண் பாஜக அரசு அறிவித்துள்ள திட்டஅடிப்படையில் மக்களுக்கு கிடைக்குமா? உறுதியாக கிடைக்காது. நடுவண் அரசு இந்த வகை முயற்சியை முன்னெடுக்க வலியுறுத்துவோம்.
இந்தியாவின் மக்கள் தொகை: 1,37,82,84,863
அப்படியானால் 20இலட்சம் கோடியை 1,37,82,84,863 வகுத்தால் கிடைப்பது: ரூபாய்:14510
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



