மே3வரை தொடரப்படவுள்ள ஊரடங்கை அடுத்து, பயணிகளுக்கான அனைத்து தொடர்வண்டி சேவைகளும் இந்த நாட்களில் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஊரடங்கை முன்னிட்டு நாடு முழுவதும் மே3வரை அனைத்து தொடர்வண்டிச் சேவைகளும் தற்காலிக நிறுத்தம் செய்யப்பட வுள்ளது. இந்தியாவிலும் தீவிரமடைந்துள்ள கொரோனா பரவல் தடுப்புக்கு என கடந்த மார்ச் 24ந்தேதி முதல் இன்று வரை ஊரடங்கு நாடு முழுவதும் செயல்படுத்தப் பட்டு வந்தது. நாளை முதல் (ஏப்ரல் 15ந்தேதி) தொடர்வண்டி போக்குவரத்து தொடர்ந்து செயல்படும் என கூறப்பட்டது. இந்நிலையில், நாட்டு மக்களிடம் இன்று காலை பேசிய தலைமைஅமைச்சர் வரும் 3ந்தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து தொடர்வண்டித்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், நாடு முழுவதும் பயணிகளுக்கான அனைத்து தொடர்வண்டி சேவைகளும் வரும் மே 3ந்தேதி வரை தற்காலிக நிறுத்தம் செய்யப்படுகிறது என தெரிவித்து உள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



