கொரோனா பாதிப்பை விட ஊரடங்கு பாதிப்பில் மக்கள் அதிகம் அல்லாடும் நிலையிலும், ஊரடங்கில் சொந்த நாட்டு மக்களுக்கு எந்த நிவாரணமும் இல்லாமல், வெறுமனே மக்கள் நடத்தைக்கான அறிவிப்பையே வெளியிட்டு வருகிறது நடுவண் அரசு. ஊரடங்கு பாதிப்புகளுக்கான ஒற்றை நிவாரணம் குறித்த செய்தியும் இந்த முறையும் இல்லை. 01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா. காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காகிதம் போட்டான் வெள்ளைக்காரன், என்பது பிரித்தானிய ஆட்சிகாலத்தில் தமிழகம் முன்னெடுத்த சொலவடை. இந்தியா விடுதலை பெற்று 72ஆண்டுகள் கடந்த நிலையிலும், அந்த சொலவடைக்கான தேவை அகற்றப்படாமலே இருப்பதுதாம் வரலாற்றுச் சோகம். கொரோனா பாதிப்பை விட ஊரடங்கு பாதிப்பில் மக்கள் அதிகம் அல்லாடும் நிலையிலும், ஊரடங்கில் சொந்த நாட்டு மக்களுக்கு எந்த நிவாரணமும் இல்லாமல், வெறுமனே மக்கள் நடத்தைக்கான அறிவிப்பையே வெளியிட்டு வருகிறது நடுவண் அரசு. ஊரடங்கு பாதிப்புகளுக்கான ஒற்றை நிவாரணம் குறித்த செய்தியும் இந்த முறையும் இல்லை. இன்று ஊரடங்கு குறித்து தொலைக்காட்சியில் தோன்றி பேசிய மோடி, ஊரடங்கை முன்பை விட கடுமையாக அடுத்த மாதம் மூன்றாம் நாள் வரை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு அவ்வளவாக இல்லாத சில மாவட்டங்களில், சில பகுதிகளில் ஊரடங்கு கெடுபிடிகளை ஏப்ரல் 20க்கு பிறகு அந்தந்த மாநிலங்கள் தளர்த்திக் கொள்ளலாம் என்று மோடி தெரிவித்தார். தலைமைஅமைச்சர் மோடி தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களிடம் இன்று காலை உரையாற்றினார். அப்போது, இன்றுடன் ஊரடங்கு காலம் நிறைவடைந்த நிலையில், அதை மே 3 வரை நீட்டிப்பதாக உத்தரவிட்டார். அதேநேரம் ஊரடங்கு தற்போது கடைப்பிடித்து வருவது போல ஒரே மாதிரியான தன்மையுடையதாக இருக்காது, என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். அவர் கூறியது: ஏப்ரல் 20 வரை ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக அனைத்து இடங்களிலும் கண்காணிக்கப்படும். 20க்குப் பிறகு கொரோனா பாதிப்பு வராத இடங்கள், போன்றவற்றை கவனித்து, அந்தந்த மாநில அரசுகள் ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்தி, முதன்மையான பணிகளை மறுபடியும் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கலாம். மக்களின் பொறுமை காரணமாக (பொறுமை அல்லா; மாபெரும் விலை) கொரோனா பரவல் வேகத்தை கட்டுப்படுத்தியுள்ளோம். ஆனால் உரிய நிபந்தனைகளுடன்தான் இந்த சலுகை வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த முறை தொழிலாளர் நாள் (மே1) தொடர்விடுமுறையோடும், ஊரடங்கிற்கான விலை கொடுப்போடும், சம்பள இழப்போடும் சொந்த நாட்டில் சோகமோடு முன்னெடுக்கப்பட இருக்கிறது. காரணம் கார்ப்பரேட் அரசுக்கு வாக்களித்த காரணத்தாலோ, அல்லது அவர்களே வாக்களித்துக் கொள்வதை நாம் அறியாமலே இருப்பதாலோ.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



