Show all

நடமாடும் சிகிச்சையகங்கள்! ஹரியானா மாநில அரசின் புதுவித யுக்தி- ஊரடங்கில் மக்களுக்கு ஒத்துழைக்க

ஊரடங்கை அறிவித்து விட்டு, நடுவண் பாஜக அரசு வெறுமனே கைத்தட்டல், விளக்கணைத்தேற்றல் போன்ற சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளை மட்டுமே முன்னெடுத்து வரும் நிலையில், இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் மக்களுக்கு நல்ல நல்ல ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றன. ஹரியானா மாநில அரசின் பாராட்டிற்குரிய ஒத்துழைப்பு.

02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா பரவல் தடுப்பிற்கு எதிராக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மிகவும் கட்டாயத்தேவை காரணங்களுக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சிறு சிறு மருத்துவ சிக்கல்களுக்காக, பொதுமக்கள் மருத்துவமனைகளுக்கு வருகை புரிந்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ள நிலையில், ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோடேக் என்ற பகுதியில் அரசு புதுவித யுக்தி ஒன்றை கையாண்டுள்ளது.

மாநில போக்குவரத்து கழகத்தின் உதவியுடன், 15 பேருந்துகளை நடமாடும் சிகிச்சையகமாக மாற்றியுள்ளது. இதில், 11 பேருந்துகள் கிராமப்புறங்களுக்காகவும், 4 பேருந்துகள் நகர்புறங்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, மாநிலம் முழுவதும் 22 மாவட்டங்களில் அரசு செயல்படுத்தவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சிறுசிறு நோய்களுக்காக பொதுமக்கள் மருத்துவமனைக்கு செல்வது தவிர்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.