ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தில் கம்பி வேலி அமைப்பதற்காக முந்தாநாள் ஜேசிபி மூலம் குழி தோண்டிய போது, சுமார் 10க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் உடைந்துள்ளன. 27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று ஒன்றிய நடுவண் வரவுசெலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அருங்காட்சியகம் அமைய உள்ள இடங்களைச் சுற்றி கம்பி வேலிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தில் கம்பி வேலி அமைப்பதற்காக முந்தாநாள் ஜேசிபி மூலம் குழி தோண்டிய போது, சுமார் 10க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் உடைந்துள்ளன. இதுகுறித்து ஊடகங்கள் பரபரப்பு கிளப்பிய நிலையில், பணிகள் நடைபெற்ற பகுதியில் நடுவண் தொல்லியல்துறை அதிகாரி எத்திஸ்குமார் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவரது அறிவுறுத்தலை தொடர்ந்து குழி தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டு, தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டன. முதல் கோணல் முற்றும் கோணலாக முன்னெடுக்கப்படாமல் இருந்தால் சரி. பொதுமக்கள் தங்கள் விரக்தியை பதிவு செய்கிறார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



