உனக்கு இதெல்லாம் கூட வருமா? இது சித்தி ராதிகா சரத்குமார். தோழி, உனக்கு வெட்கமா, எப்படி? இது பிரசன்னா. இவை: வெட்கப்படும் வரலட்சுமி சரத்குமாரை கீச்சுவில் பார்த்ததன் வெளிப்பாடு. 27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: வெட்கப்படும் வரலட்சுமி சரத்குமாரை கீச்சுவில் பார்த்துவிட்டு, ராதிகா சரத்குமாரும், பிரசன்னாவும் செய்த பகடியாடல், இணையத்தை கலக்கிய இன்றைய நிழற்படமாய் அமைந்து விட்டது. வரலட்சுமி சரத்குமார் என்கிற பெயரை கேட்டாலே, சும்மா அதிருதில்ல மாதிரிப் பெண் என்பது தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். இந்நிலையில் வரலட்சுமி தான் நடிக்கும் தெலுங்கு படமான நாந்தியில் வெட்கப்பட்டபோது எடுத்த புகைப்படத்தை கீச்சுவில் வெளியிட்டுள்ளார். நம்புங்கப்பா, நம்ம வரு தான் வெட்கப்பட்டிருக்கிறார் என்று இரசிகர்கள் மகிழ்ச்சிப் பதிவுகளை கொட்டிக் குவித்திருக்கின்றனர். தான் வெட்கப்பட்டதாகக் கூறி வரலட்சுமி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து, சித்தி ராதிகா சரத்குமார் அப்படியே அதிர்ச்சி ஆயிட்டாராம். என்னாது, வெட்கமா? என்று கூறி ஆச்சரிய நகையி (ஸ்மைலி) படத்தை இடுகையில் தட்டிவிட்டுள்ளார். வரலட்சுமி பதிவிட்ட கீச்சைப் பார்த்த நடிகர் பிரசன்னாவாலும் தன் கண்களையே நம்ப முடியவில்லையாம், தோழி, உனக்கு வெட்கமா, எப்படி என்று நம்பமுடியாமல் கேட்டுள்ளார் அவர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



