Show all

விஜய் தொலைக்காட்சியில் இடம்பெறும் சுவர் நிகழ்ச்சிப் போட்டியாளர்கள் போன்ற கடப்பாடு மட்டுமா! நம்மிடம் சரக்குசேவை வரி அள்ளும் நடுவண் பாஜகஅரசுக்கு

தொடர்வண்டித் துறை பத்து திட்டங்களுக்கு தமிழகத்துக்கு 10,000, உத்தரப் பிரதேசத்துக்கு 7000 கோடி வரவுசெலவு திட்டத்தில் அறிவிப்பு. சரக்குசேவை வரியில் இந்தியாவிலேயே  தமிழகம்தான் அதிகமான வருவாயை ஒன்றிய பாஜக அரசுக்கு அள்ளிக் கொடுக்கிறது. அப்படிப்பட்ட  தமிழகத்திற்கு இப்படி இழைக்கிறது துரோகம் நடுவண் பாஜக அரசு. தமிழக அரசியல் கட்சிகள் உடனடியாக எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சு.வெங்கடேசன்.

27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்நாட்டுத் தொடர்வண்டித்துறையில், பத்து திட்டங்களுக்கு வெறும் 10,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது வரவுசெலவுத் திட்டத்தில் நடுவண் பாஜக அரசு. இது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்று கொந்தளிக்கிறார் மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்கள். 

விஜய் தொலைக்காட்சியில் சுவர் என்று ஒரு சிறப்பான போட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதில் கிழமைக்கு நால்வருக்கு பத்து இலட்சம் இருபது இலட்சம் என்று பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதில் இலட்சக்கணக்கில் பணத்தை அள்ளிச் செல்லும் போட்டியாளர்கள்- அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் பிரியாங்காவிற்கும் மாகபா விற்கும் ஒரு ரூபாய் தேன் மிட்டாய் வாங்கித் தருவதாக பகடியாடுவார்கள். அதுபோல் அல்லவா இருக்கிறது நடுவண் அரசின் இந்த ஒதுக்கீடு. ஒரு நாள் தொடர்வண்டியில் பயணிக்கும் தமிழக பயணிகள் அனைவருக்கும் தேன் மிட்டாய் வாங்கிக் கொடுப்பதற்குக் கூட இந்த பத்தாயிரம் ரூபாய் போதாதே. 

விஜய் தொலைக்காட்சியில் இடம்பெறும் சுவர் நிகழ்ச்சிப் போட்டியாளர்கள் போன்ற கடப்பாடு மட்டுமா! நம்மிடம் சரக்குசேவை வரி அள்ளும் நடுவண் பாஜகஅரசுக்கு 

நாம் தமிழகத்திலிருந்து வரிகளை, நடுவண் பாஜக அரசுக்கு அள்ளி அள்ளி கொடுத்துவிட்டு, தேன் மிட்டாய் வாங்கி சாப்பிடுவதற்கு- தமிழக மக்கள் என்ன விஜய் தொலைக்காட்சி போல சுவர் நிகழ்ச்சியா நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

சரக்குசேவை வரியில் இந்தியாவிலேயே  தமிழகம்தான் அதிகமான வருவாயை ஒன்றிய பாஜக அரசுக்கு அள்ளிக் கொடுக்கிறது. அப்படிப்பட்ட  தமிழகத்திற்கு இப்படி இழைக்கிறது துரோகம் நடுவண் பாஜக அரசு. தமிழக அரசியல் கட்சிகள் உடனடியாக எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சு.வெங்கடேசன்.

தமிழ்நாட்டுத் தொடர்வண்டித்துறை திட்டங்களுக்கு வெறும் 10,000 ரூபாய் மட்டுமே வரவுசெலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சு.வெங்கடேசன். இதுகுறித்து பேசியுள்ள சு.வெங்கடேசன், தொடர்வண்டித் துறைக்கு வரவுசெலவுத்திட்டத்தில் தமிழகத்தில் நடக்க இருக்கும் பத்து திட்டங்களுக்கு, 12,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால், 10,000 ரூபாய் மட்டும் ஒதுக்கி இருக்கிறார்கள். இது மிகப்பெரிய அநீதி. அதே நேரம், உத்தரப் பிரதேசத்துக்கு 7,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்கள் என்று பேசியுள்ளார் சு.வெங்கடேசன்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.