சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் வணிக வளாகத்தில் இரு பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மார்ச் 10 முதல் 17 வரை அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. 19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் வணிக வளாகத்தில் இரு பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மார்ச் 10 முதல் 17 வரை அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் 124 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் சென்னை பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்த 28 அகவை ஆண் ஒருவருக்கும், அதே பீனிக்ஸ் வணிகவளாகத்தில் பணிபுரிந்து வந்த 25 அகவை பெண்ணுக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அந்த ஆண் பணியாளர் தற்போது திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்தப் பெண் பணியாளர் தற்போது அரியலூரில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பெண்ணுக்கு கேரளாவிலிருந்து வந்த வாடிக்கையாளரிடம் இருந்து தொற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. பீனிக்ஸ் வணிக வளாகத்தில் பணியாற்றிய இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு மார்ச் 10 முதல் 17 வரை சென்றிருந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது போல சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்கும் மையத்திற்கு வந்தவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மையத்திற்கு மார்ச் 15ல் சென்றவர்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



