Show all

கேரளநாடும், தமிழ்நாடும் முதல் இரண்டு மாநிலங்கள்! இந்தியாவில் சிறப்பான ஆட்சி தருவதில்

சமநிலை, வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையிலும், நிர்வாக செயல்திறன், சூழல் குறியீட்டு திறன் ஆகியவற்றின் பின்னணியிலும் இந்தியாவின் சிறப்பான ஆட்சியைத் தரும் மாநிலங்களாக முதல் நான்கு இடங்களை  தென்னாட்டின் மாநிலங்களே கைப்பற்றியுள்ளன. ஆனால் ஒன்றிய அட்சி வடக்கின் தலைவர்கள் கையில் இந்தியா எப்படி உருப்படும்?

14,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கே. கஸ்தூரி ரங்கன் தலைமையிலான பொது முன்னெடுப்பு அமைப்பு நாட்டின் சிறந்த ஆட்சி தரும் மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

சமநிலை, வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையிலும், நிர்வாக செயல்திறன், சூழல் குறியீட்டு திறன் ஆகியவற்றின் பின்னணியிலும் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் பெரிய மாநிலங்களின் பிரிவில் இடது முன்னணி தலைமையில் முதல்வர் பினராயி விஜயன் ஆட்சி செய்யும் கேரள மாநிலம் (1.388 குறியீட்டு அலகு) முதலிடத்தையும், அதிமுக தலைமையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சி செய்யும் தமிழ்நாடு (0.912 குறியீட்டு அலகு) இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.

மற்ற தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகம் ஆகியவை முறையே மூன்று மற்றும் நான்காமிடத்தை பிடித்துள்ளன. 

இந்தியாவின் சிறப்பான ஆட்சியைத் தரும் மாநிலங்களாக முதல் நான்கு இடங்களை  தென்னாட்டின் மாநிலங்களே கைப்பற்றியுள்ளன. ஆனால் ஒன்றிய அட்சி வடக்கின் தலைவர்கள் கையில் இந்தியா எப்படி உருப்படும்? 

இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து காங்கரஸ் ஆனாலும் சரி தற்போதைய பாஜக ஆனாலும் சரி ஆளும் தலைவர்களை தருகின்ற உத்தரப்பிரதேசம், ஒடிசா, பிகார் ஆகிய மாநிலங்கள் பட்டியலில் இறுதி மூன்று இடங்களைப் பிடித்தன.

அப்படியானால் தெற்கில் இருக்கும் தலைவர்கள் ஒன்றிய ஆட்சியில் இடம் பெறும் போதுதாம் இந்திய ஒன்றியமும் சிறப்பான ஆட்சியைத் தரமுடியும் என்பதை இந்த ஆய்வு விவரம் நமக்கு விளக்குவதாக இருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.