Show all

மிகக் குறைந்த மருத்துவ செலவுகளைக் கொண்டு இந்தியாவில் தமிழகம் முதலிடம்! ஓ அந்த தரத்தை முறியடிக்கும் முயற்சிதான் நீட்டோ

இந்தியாவில் மக்களுக்கு வழங்கப்படும் நலங்கு மற்றும் குடும்ப நலத்துறை சேவைகள் அதற்கான கட்டணங்கள் தொடர்பான ஆய்வை மேற்கொண்ட ஒன்றிய அரசு, புள்ளி விபரங்களின் அடிப்படையில் வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழகம் முதலிடம். அப்புறம் எதுக்கு வடஇந்திய மேலாண்மையில் நீட்

14,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் மக்களுக்கு வழங்கப்படும் நலங்கு மற்றும் குடும்ப நலத்துறை சேவைகள் அதற்கான கட்டணங்கள் தொடர்பான ஆய்வை மேற்கொண்ட ஒன்றிய அரசு, புள்ளி விபரங்களின் அடிப்படையில் வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழகம் முதலிடம் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அப்படியானால் மருத்துவ கல்விக்கான மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தகுதி தமிழ்நாட்டுக்குத் தானே இருக்க முடியும்? தமிழகக் கல்வித் திட்டத்தில் படித்த மாணவர்கள் நீட்டை எதிர் கொள்ள முடியவில்லை என்றால், நீட்தானே தரமற்றது என்பதை ஏன் ஒன்றிய அரசின் பாஜக ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்? என்பது கேள்வியானால்- மறுக்கவில்லை நோக்கத்திற்குச் சரியாக இருக்கின்றார்கள் என்பதே பொருள்.

அப்புறம் எதுக்கு வடஇந்திய மேலாண்மையில் நீட் என்ற கேள்விக்கு சரியான விடை அவர்கள் மக்களிடம் இருந்து அறங்கூற்றுமன்றம் வரை பீற்றிக் கொள்வது தரமல்ல. மருத்துவத்தின் மீதான ஒன்றிய பாஜக அரசின் மேலாண்மை விருப்பமே என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த ஆய்வு அனைத்து மாநில மற்றும் ஒன்றியப் பகுதிகளிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தப் பட்டியலில், மிகக் குறைந்த மருத்துவ செலவுகளைக் கொண்டு தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் சாதாரண சிகிச்சைக்கு தோராயமாக 433 ரூபாய் முதல் 520 ரூபாய் வரை செலவாகிறது. மற்றும் இதுவே தனியார் மருத்துவமனைகளில் 28,412 ரூபாய் முதல் 41,566 ரூபாய் வரை செலவாகிறது என்றும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு மருத்துவனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நகர்ப்புறங்களில் 42விழுக்காடு மற்றும் கிராமப்புறங்களில் 56விழுக்காடு ஆக உள்ளது.

இதுவே தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்வோரின் எண்ணிக்கை நகர்ப்புறங்களில் 54விழுக்காடு மற்றும் கிராமப்புறங்களில் 41விழுக்காடு என உள்ளதாக புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் அதிக படுக்கை வசதி கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2வது இடத்தில் இருப்பதாக ஒன்றிய நலங்குத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.