கொரோனா ஊரடங்கு புதிய தளர்வுகளின்படி, தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாளது 01,கார்த்திகை (நவம்பர் 16) முதல் செயல்படலாம் என்றும் 25,ஐப்பசி (நவம்பர் 10) முதல் திரையரங்குகள் செயல்படலாம். 16,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா ஊரடங்கு புதிய தளர்வுகளின்படி, தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாளது 01,கார்த்திகை (நவம்பர் 16) முதல் செயல்படலாம் என்றும் 25,ஐப்பசி (நவம்பர் 10) முதல் திரையரங்குகள் செயல்படலாம் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் பொது மக்கள் விழாக் காலத்தில் அதிகம் கூடுவதை தவிர்க்கவேண்டும் என்றும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணிவது மற்றும் கைகழுவுவது போன்றவற்றைப் பின்பற்றவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு கொரோனா நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 3,000 ஆட்களுக்குக் கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை சுமார் 50,000ல் இருந்து தற்போது 25,000 ஆட்கள் என்ற அளவிற்கு குறைந்து உள்ளது. ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட 12 ஒருங்கிணைப்புக் குழுக்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் நோயக்; கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன என முதல்வர் தெரிவித்துள்ளார். 2.பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் நாளது 01,கார்த்திகை (நவம்பர் 16) முதல் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. 3.தற்காலிக இடத்தில் தற்போது செயல்படும் பழக்கடைகள் மொத்த வியாபாரம், நாளை முதலும், பழம் மற்றும் காய்கறி சில்லரை வியாபாரக் கடைகள் மூன்று கட்டங்களாக நாளது 01,கார்த்திகை (நவம்பர் 16) முதலும் கோயம்பேடு அங்காடி வளாகத்தில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, செயல்படலாம். 4.பொதுமக்களுக்கான புறநகர் மின்சார தொடாவண்டிப் போக்குவரத்துச் சேவை ஒன்றிய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது. 5.சின்னத்திரை, திரைப்பட தொழிலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஒரே சமயத்தில் 150 ஆட்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. 6.திரையரங்குகளைத் திறக்க வரப்பெற்ற கோரிக்கைகளை பரிசீலித்து, தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவற்றை திரையிட்டும், ஒன்றுக்கும் மேற்பட்டு திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் திரையரங்குகள் உள்பட அனைத்து திரையரங்குகளும் 50 விழுக்காடு இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி 25,ஐப்பசி (நவம்பர் 10) முதல் செயல்படலாம். 7.மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை தொடர்பான கூட்டங்கள் 01,கார்த்திகை (நவம்பர் 16) முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 100 ஆட்கள் பங்கேற்கும் வகையில், நடத்த அனுமதிக்கப்படுகிறது.
1.பள்ளிகள் (9, 10, 11, மற்றும் 12-ஆம் வகுப்புகள் மட்டும்), அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் நாளது 01,கார்த்திகை (நவம்பர் 16) முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படலாம் .
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



