Show all

மோடியின் காஷ்மீர் வருகைக்கு சில மாநிலக் கட்சிகள் எதிர்ப்பு

02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியத் தலைமை அமைச்சர் மோடியின் காஷ்மீர் வருகையின் போது அவருக்கு எதிராக போராட்டம் நடத்திட சில மாநிலக் கட்சிகள் முடிவு செய்துள்ளன. வரும் சனியன்று இந்தியத் தலைமை அமைச்சர் மோடி காஷ்மீர் வருகை தருகிறார். ஷெ ரீ காஷ்மீர்பல்கலை.பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். இந்நிலையில் இந்தியத் தலைமை அமைச்சர் மோடி வருகையை கண்டித்து காஷ்மீரின் சில மாநிலக் கட்சித் தலைவர்கள் மிகப் பெரிய போராட்டம் நடத்திட உள்ளனர். இது தெடார்பாக சில மாநிலக் கட்சிகளின்  தலைவர்களான சையத் அலிஷா கிலானி, யாசின் மாலிக், மிர்வாஸ் உமர் பரூக் ஆகியோர் கூட்டாக ஆலோசனை நடத்தினர். பின்னர் போராட்டம் நடத்திடவும் கடையடைப்பு பேராட்டம் நடத்திடவும் முடிவு செய்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,789.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.