01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் சிவகாசியில் குறிப்பேடுகள் தயாரிக்கும் பணி இரவு பகலாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சரக்கு-சேவை வரி, அதையொட்டி மூல பொருட்களின் விலை உயர்வால் 20 விழுக்காடு விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகம் முழுவதும் பாட குறிப்பேடுகளின் விற்பனை சூடுபிடிக்கும். மாணவர்களுக்குத் தேவையான பாடகுறிப்பேடுகள் தயார் செய்யும் பணி 'குட்டி ஜப்பான்' என்று அழைக்கப்படும் சிவகாசியில் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. நீளவகை குறிப்பேடுகள், நடைமுறைக்கான குறிப்பேடுகள், கணக்கு, இரண்டு கோடு, நான்கு கோடு, வரைபடக் குறிப்பேடுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பேடுகள் தரமான தாள், பல வண்ணங்களில் அட்டை என பல்வேறு வடிவமைப்புகளில் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் தயார் செய்யப்பட்டு வருகிறது. இங்கு தயார் செய்யப்படும் குறிப்பேடுகள் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் எல்லோரும் இங்கே வருவார்கள். பட்டாசு தொழிலுக்கு அடுத்தபடியாக சிவகாசியில் அச்சு தொழில் உள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,788.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



