பீகாரில் மூளை காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த தவறியதாக நடுவண் மற்றும் பீகார் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மீது பீகார் மாவட்ட அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சமூக ஆர்வலர் ஒருவர். 03,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பீகார் மாநிலத்தின் சில மாவட்டங்களில் ஏழ்மையின் காரணமாக பாமரமக்களிடம் மூளை காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முசாபர்நார் மாவட்டத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மூளை காய்ச்சல் நோய்க்கு சுமார் 104 குழந்தைகள் வரை இதுவரை பலியாகியுள்ளனர். சட்டப்பிரிவு 308, 323 மற்றும் 504 ஆகியவற்றின் கீழ் தொடர்ந்துள்ள இந்த வழக்கை அனுமதித்த தலைமை அறங்கூற்றுவர் விசாரணையை திங்கட் கிழமைக்கு ஒத்திவைத்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,187.
இந்நிலையில், மூளை காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருவது தொடர்பாக முன்கூட்டியே மக்களிடம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கட்டுப்படுத்த தவறியதாக நடுவண் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் பீகார் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கல் பண்டே ஆகியோர் மீது முசாபர்நார் மாவட்ட அறங்கூற்றுமன்றத்தில் சமூக ஆர்வலர் தமன்னா ஹாஷ்மி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.