Show all

நீண்ட நேர கைத்தட்டல், பாராட்டு போதும், பீகாருக்கு வாங்க ஸ்மிருதி இரானி! இணைய ஆர்வலர்கள் கோபப்பதிவு.

பீகாரில் மூளை காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த தவறியதாக நடுவண் மற்றும் பீகார் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மீது வழக்கு ஒரு பக்கம். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அமேதி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றதன் மீதான பாராட்டு மறுபக்கம் என்றால்,  இணைய ஆர்வலர்களின்- ‘பீகாருக்கு வாங்க’ கோபம், அதன் மீதான மூன்றாவது கோணமாக.

03,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121:  பதினேழாவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தின் முதல் நாளான நேற்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக பேரவைத் தலைவர் வீரேந்திரநாத் குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நேற்று பாராளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றனர். அப்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அமேதி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார். அப்போது பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் நீண்ட நேரம் மேசையை தட்டி பாராட்டினர். இதற்கு காரணம், அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி, 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதாம். 

இந்த நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி பதவியேற்றுள்ளார் என்பதால், மூளைக்காய்ச்சலால் 104 குழந்தைகள் இறந்து பீகாரில் பீதி பரவி வருகிற நிலையில், பாராட்டு போதும் பீகாருக்கு வாங்க என்று இணைய ஆர்வலர்கள் பதிவிட்டு கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,187.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.