இந்தியா முழுவதும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தில் இயங்கிவரும், போர்த்துறைப் பள்ளிகள் 28 மட்டும் உள்ளன. தற்போது ஒன்றிய பாஜக அரசு வரவு-செலவு திட்டத்தில் மேலும் 100 பள்ளிகளை நிறுவ நிதி ஒதுக்கியுள்ளது சைனிக் பள்ளிகள் என்பது சைனிக் பள்ளிகள் சமுதாயம் என்ற இந்திய அரசு அமைப்பு மூலம் அமைக்கப்பட்டது. இது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த கே.வி.கிருஷ்ண மேனனால் திட்டமிடப்பட்டது. இந்தியாவின் அனைத்துப் பகுதியிலிருந்தும் மாணவர்களை இந்தியப் போர்த்துறைக்குச் சேரத் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பள்ளிகள் அமைக்கப்பட்டன. தற்போது நாடு முழுவதும் 28 பள்ளிகள் பல்வேறு மாநிலங்களில் உள்ளன. இந்தப் பள்ளிகளில் நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.
19,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியா முழுவதும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தில் இயங்கிவரும், சைனிக் பள்ளிகள் என்ற அழைக்கப்படும், போர்த்துறைப் பள்ளிகள் 28 மட்டும் உள்ளன. தற்போது ஒன்றிய பாஜக அரசு வரவு-செலவு திட்டத்தில் மேலும் 100 பள்ளிகளை நிறுவ நிதி ஒதுக்கியுள்ளது
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.