இந்தியாவில் அதானி, அம்பானி என்று இருவர் மட்டுமே தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், நாட்டில் மூடப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை வளர்ந்து வருவதால், நாட்டின் பொருளாதார ஏற்றதாழ்வின் விகிதமும் வளர்ந்து வருகிறது. கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களில், 36 விழுக்காட்டுக்கும் அதிகமான, அதாவது, 6.80 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மஹாராஷ்டிரா, டில்லி ஆகிய இடங்களில் முறையே, 1.42 லட்சம், 1.26 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் மூடப்பட்ட நிறுவனங்கள் எண்ணிக்கை, இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய நிலையில் 24 விழுக்காடாக இருந்தது. தற்போது 44 விழுக்காடாக அதிகரித்துள்ளதாம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,230.
15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில், 36 விழுக்காட்டுக்கும் அதிகமான நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.