Show all

இரஜினி கீச்சு நீக்கம்! கலைச்சொல் ஆக்கங்களை பயன்படுத்தும் போது தகவல் முழுமையாகத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும்

கொரோனா குறித்து பற்பலஆயிரம் பேர்களும் பற்பலஆயிரம் கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு கெரோனா மீதான கோபக் கிடக்கையை வெளியிட்டே வருகிறார்கள். பலமாதங்களாக இவை நடந்தே வருகின்றன. ஆனால் இரஜினிகாந்த் பாஜக மீதான விருப்பத்தில் ஒரு பதிவு வெளியிட்டால் அது நீக்கப்படுகிறது. ஏன்?

09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா குறித்து பற்பலஆயிரம் பேர்களும் பற்பலஆயிரம் கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு கெரோனா மீதான கோபக் கிடக்கையை வெளியிட்டே வருகிறார்கள். பலமாதங்களாக இவை நடந்தே வருகின்றன. ஆனால் இரஜினிகாந்த் பாஜக மீதான விருப்பத்தில் ஒரு பதிவு வெளியிட்டால் அது நீக்கப்படுகிறது. ஏன்?

தப்பான தகவலை பரப்பியதாக, நடிகர் இரஜினிகாந்த் வெளியிட்ட காணொளியை கீச்சு இணையதளம் அதிரடியாக நீக்கியுள்ளது. இன்று மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகர் இரஜினிகாந்த் நேற்று மதியம் ஒரு காணொளியைக் கீச்சுவில் வெளியிட்டார்.

அந்தக் காணொளியில், “கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் கட்டத்தில் உள்ளது. வெளியில் மக்கள் நடமாடும் இடங்களில் இருக்கும் தொற்று 12 லிருந்து 14 மணி நேரம் பரவாமல் இருந்தால் 3 வது நிலைக்கு போகாமல் தடுத்து விடலாம். அதனால் தான் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி ஊரடங்கு உத்தரவு கொடுத்திருக்கிறார்.

இதேமாதிரி இத்தாலியில் கொரோனா இரண்டாவது நிலையில் இருந்த போது அந்நாட்டின் அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் மக்கள் உதாசீனப்படுத்தியதால் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின. அதைப்போன்ற ஒரு நிலை இந்தியாவில் வந்துவிடக்கூடாது” என்று கூறியிருந்தார்.

ஆனால் இதில் 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை கொரோனா பரவாமல் இருந்தால் தொற்று பரவல் 3-வது நிலைக்குப் போகாமல் தடுத்து விடலாம். இத்தாலியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது மக்கள் அதை உதாசீனப்படுத்தியதால் தான் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின என்பது உள்ளிட்ட கருத்துகள் ஆதாரமற்ற இயல்அறிவுக்கு (சயின்ஸ்) பொருந்தாத செய்தி என்பது உண்மை. இதனாலேயே இரஜினிகாந்தின் கீச்சு காணொளியைக் கீச்சு நிர்வாகம் நீக்கியது.

மோடியின் இந்த சுயஊரடங்கு என்கிற நடவடிக்கை ஒரு அரசியல் கலாச்சாரம். அதற்குள் இயல்அறிவு (சயின்ஸ்) காரணத்தை தேட முயலாமல் இந்தியாவின் தலைமைஅமைச்சர் சொல்கிறாரே யென்று இந்தியா முழுவதும் முன்னெடுக்கிறது. ஆனால் இரஜினி மட்டும் அதற்கு இயல்அறிவு (சயின்ஸ்) காரணத்தை கற்பிக்க முயன்றதாலேயே அந்த அடிப்படைக்கு மோடியின் இந்த நடவடிக்கை பொருந்துவதல்ல என்று இரஜினிக்கு கொட்டு வைத்து தெரிவிப்பது போல அவர் பதிவை நீக்கி தெளிவு படுத்தியிருக்கிறது கீச்சு.

கட்டாயத்தேவையில்லாமல் வெளியே வராதீர்கள் என்று தமிழக அரசு அறிவித்துக்கொண்டேயிருப்பது முன்னெச்சரிக்கை நடவடிக்கை. மனிதர்கள் மீது இல்லாமல் வெளியில் மற்ற பொருள்களில் படிந்திருக்கிற கொரோனா நுண்ணுயிரியின் ஆயுள் பதினான்கு நாட்கள் மட்டுமே என்பதால், தமிழக அரசின் வேண்டுகோள் ஒரு மாத அளவில் பின்பற்றப் படும்போது வெளியில் பொருள்கள் மீது கொரோனா பரவியிருந்தாலும் அவைகள் செயலிழந்து விடும் என்பது சரியே.

ஆனால்; அனைவருமே 14 மணிநேரம் மட்டும் வெளியே வராதீர்கள் என்பதில் 28ல் ஒருபங்கு (அரை அல்ல) கிணறு தாண்டுகிற நடவடிக்கைதான் என்று தெரிகிறது. அதனை யாரும் எதிர்க்காமல் ஒத்துப்போவதால், அதற்கு பெரிய இயல்அறிவு (சயின்ஸ்) காரணத்தை கற்பிக்க முயலுவதை அறிஞர் உலகம் ஏற்காது என்பதுதான் இந்த கீச்சு நடவடிக்கை நமக்கு உணர்த்துவதாகும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.