Show all

இன்னொரு நபருக்கு கொரோனா தொற்று, எண்ணிக்கை ஏழானது! தமிழ்ச்சமூக பரவல் சாராத, ஸ்பெயினில் இருந்து தமிழகம் வந்த ஒரு பயணி

தமிழ்ச்சமூக பரவல் சாராத, ஸ்பெயினில் இருந்து தமிழகம் வந்த ஒரு பயணிக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இவரோடு தமிழகத்தில் கரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது என்பதை, தமிழக நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆனால் இவரும் தமிழ்ச்சமூக பரவல் சாராத, ஸ்பெயினில் இருந்து தமிழகம் வந்த ஒரு பயணி ஆவார். இவரோடு தமிழகத்தில் கரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்றால் இதுவரை 334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திற்குள் சமுதாய பரவல் என்று சொல்லக்கூடிய வகையில் கொரோனா நோய் பாதிப்பு யாருக்கும் இதுவரை கண்டறியப்படவில்லை. அயல்நாடு, பிறமாநில வருகை சார்ந்து தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று வரை 6ஆக இருந்தது.

ஏமனிலிருந்து வந்த காஞ்சிபுரம் பொறியியல் பட்டதாரி ஒருவருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பின்னர் டெல்லியிலிருந்து சென்னைக்கு தொடர்வண்டியில் வந்த வட மாநில இளைஞர் ஒருவருக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் தங்கியிருந்த 8 பேர் மற்றும் தொடர்வண்டியில் உடன் பயணம் செய்தவர்கள் எனப் பலரும் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், இரு நாட்களுக்கு முன் மூன்றாவதாக அயர்லாந்திலிருந்து வந்த இளைஞர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

நேற்று ஒரே நாளில் 3 பேர் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளானது கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஸ்பெயினில் இருந்து தமிழகம் வந்த ஒரு பயணிக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.