தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு எதிராக- தமிழக மக்களும், தமிழக அரசும் முன்னெடுத்து வரும் மூன்று நடவடிக்கைகள் சிறப்பான பலனை தந்தே வருவதாக அறிய முடிகின்றது. இந்த நிலையில், ஏதோ அரசியல் அடையாளப் போராட்டம் போல, மோடியின் ஒரு பகல் சுயஊரடங்கு வேண்டுகோள் இந்தியாவிற்கு போதாது. அது ஒரு அரை கிணறு தாண்டும் நடிவடிக்கையாகவே முடியும். மோடி அவர்கள் தமிழக மக்களும், தமிழக அரசும் பின்பற்றி வரும் இந்த மூன்று நடிவடிக்கைகளை குறைந்தது ஒரு மாதமாவது ஒட்டுமொத்த இந்தியாவிற்கு முன்னெடுத்திட முயலவேண்டும். தமிழகத்தில் முதல்முறையாக ஓமன் நாட்டில் இருந்து வந்திருந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளருக்கு, கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவருக்கு சென்னை அரசுபொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் குணமடைந்து வீடு திரும்பியதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அடுத்தடுத்து மொத்தம் 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி, நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது கீச்சுப் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். அதில்: இரண்டு பேர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள், ஒருவர் நியூசிலாந்தில் இருந்து வந்தவர். மூன்று பேருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆகும். வெவ்வேறு நாடுகளில் இருந்து பயணம் செய்து இந்தியா வந்தவர்களுக்குத்தான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்திற்குள் சமுதாய பரவல் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இந்த நோய் தாக்கம் கண்டறியப்படவில்லை. புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள், தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். வெளிநாட்டிலிருந்து எங்கெல்லாம் வருகிறார்களோ, அங்கெல்லாம் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்வண்டி நிலையங்கள் பிற மாநில எல்லைகள் உள்ளிட்ட அனைத்திலும் சோதனைகள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த வகையாக தமிழகத்தில் இதுவரை 1,98,741 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர்களில் 4,253 பேரை மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். முந்தா நாள் 232 பேருக்கு பாதிப்பு இல்லை என தெரிந்தது. நேற்று 303 பேருக்கு பாதிப்பு இல்லை என உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதியாக இல்லையென்று ஏழு பேர்கள் வீட்டிற்கே அனுப்பப் பட்டுள்ளனர்.
09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இதுவரை தமிழகத்தை- “வெவ்வேறு நாடுகளில் இருந்து பயணம் செய்து இந்தியா வந்தவர்களுக்குத்தான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்திற்குள் சமுதாய பரவல் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இந்த நோய் தாக்கம் கண்டறியப்படவில்லை.”
என்பதான, கொரோனா பரவலுக்கு எதிராக, பலன் தரும் செய்திக்கு காரணமாக-
தமிழகத்தில் அரசாலும் மக்களாலும் முன்னெடுக்கப் பட்டு வரும் மூன்று நடவடிக்கைகள்:-
1.கொரோனா பதிப்பு உள்ளவர்கள் நுழையாமல் தடுத்தல்.
2.தவிர்க்க முடியாமல் கொரோனா பாதிப்போடு நுழைந்தவர்களுக்கு தனிமைப் படுத்தி சிகிச்சை அளித்தல், அவர்களோடு தொடர்பு கொண்டவர்களையும் தனிமைப் படுத்தி கண்காணித்தல்.
3.மகிழ்ச்சியை முன்னெடுக்க- கை குலுக்கி பாராட்டுதல்,
கட்டிக்கொள்ளுதல் ஒட்டிக்கொள்ளுதல் இதுவரையிலுமே
தமிழர் கற்று போற்றாத நடைமுறையென்பதாக தொடர்வது. ஆகியன அந்த மூன்று நடவடிக்கைகள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



